• June 7, 2025

அமரன் படகுழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்

 அமரன் படகுழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார்.

உலகளவில் கிட்டதட்ட 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் அமரன் திரைப்படம் வெளியானது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமரன் படத்தை பாராட்டினார். இத்திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகளவில் 42.3 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படகுழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், அமரன் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான கமல்ஹாசனை தொலைபேசியில் அழைத்து பாராட்டினார். மேலும், நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தயாரிப்பாளர் ஆர்.மகேந்திரன், ஒளிப்பதிவாளர் சாய் உள்ளிட்ட அமரன் படகுழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *