• June 7, 2025

லக்கி பாஸ்கர் – அதிகரிக்கும் காட்சிகள் :வசூல் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 லக்கி பாஸ்கர் – அதிகரிக்கும் காட்சிகள் :வசூல் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இயக்குநர் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடித்த திரைப்படம் லக்கி பாஸ்கர். தீபாவளி வெளியீடாக அக்டோபர்.31-ல் வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

சாதாரண நபரான நாயகன் அரசு மற்றும் வங்கி நிர்வாகத்தை ஏமாற்றி பெரும் செல்வந்தனாக மாறும் கதையாக உருவான இப்படம், தெலுங்கு மற்றும் மலையாளத்தை முதன்மையாக குறிவைத்து உருவானாலும் தமிழிலும் கவனிக்கப்பட்டு வருகிறது.

முக்கியமாக சென்னையில் படம் வெளியான முதல் நாளை விட தற்போது கூடுதலாக காட்சிகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. பிரதர் மற்றும் பிளடி பெக்கர் படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றதால் அப்படத்தின் திரைகளை அமரனும், லக்கி பாஸ்கரும் நிரப்பும் என தெரிகிறது.

இந்த நிலையில், லக்கி பாஸ்கர் திரைப்படம் முதல் இரண்டு நாள்களில் உலகளவில் ரூ.26.2 கோடியை வசூலித்துள்ளதாக படகுழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *