கோவில்பட்டிக்கு வருகை தந்த நடிகர் பிரபு தனது தந்தைசிவாஜி கணேசான் 1981ம் ஆண்டு திறந்து வைத்த பசும்பொன் உ. முத்துராமலிங்க தேவர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தேவர் சிலை பொறுப்பாளர் மற்றும் பராமரிப்பாளர் ச. ஆறுமுகப் பாண்டியன் வரவேற்றார். நடிகர் பிரபுவை பார்க்க ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்து விட்டனர்.அவர்களை பார்த்து கையசைத்து கும்பிட்டு தனது மகிழ்ச்சியை பிரபு தெரிவித்து கொண்டு புறப்பட்டு சென்றார்.
சென்னை துறைமுகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு :- கேள்வி : ஒரே நாடு,,ஒரே தேர்தல் என்று வந்தால் அதிமுக ஏற்றுக்கொள்ளுமாபதில் : கொள்கை முடிவு என்பது வேறு. இது கட்சியின் கொள்கை முடிவு.16 ம் தேதிக்குள் கடிதம் அனுப்பவேண்டும். கடிதத்தில் என்ன உள்ளது என்பது சஸ்பென்ஸ். கட்சியின் கொள்கை முடிவினை இங்கு பொது வெளியில் சொல்ல முடியாது.அதே நேரத்தில் சூசமாக என்ன சொல்ல முடியும் என்றால்.தமிழகர்கள் எல்லோருக்குமே ஒரே நாடு.ஒரே தேர்தல் […]
பொங்கல் விடுமுறை:வெளியூர்களுக்கு படையெடுக்கும் மக்கள்; போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனங்கள்
பொங்கல் விடுமுறை எதிரொலியாக, சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு மக்கள் படையெடுத்து உள்ளனர்,. இதனால் சென்னை-செங்கல்பட்டு இடையே காலை நேரத்தில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து வந்தன, உளுந்தூர் பேட்டை வரை இந்த நிலை தான் நீடித்தது. சேலம், கடலூர் செல்லும் வாகனங்கள் பிரிந்து சென்று விட்டதால் ஓரளவு நெரிசல் குறைந்தது. ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் , கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்ல […]
நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையிலான ‘ஒரே நாடு ஒரே தேர்தலை’ செயல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்யுமாறு தேசிய சட்ட ஆணையத்தை, மத்திய சட்ட அமைச்சகம் கேட்டுக்கொண்டது. இந்த விவகாரத்தில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர்களிடம் கருத்து கேட்டு, அவர்களது நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் முக்கிய சட்ட திருத்தத்தை சட்ட ஆணையம் கொண்டு வர உள்ளது. நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது […]
கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக கயத்தார் டோல்கேட் பகுதியில் 33வது சாலை பாதுகாப்பு வார விழாவும் தூய்மை வார விழாவும் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து துணை ஆணையாளர் ரவிச்சந்திரன் கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் மோட்டார் வாகன ஆய்வாளர் சுரேஷ் விஸ்வநாதன் மற்றும் சங்கரன்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலர் அம்பாசமுத்திரம் மோட்டார் வாகன ஆய்வாளர் ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் பொதுமக்கள் அனைவரும் இந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். […]
இளமைக்கால பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்; முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரின் ருசிகர அனுபவங்கள்
முன்னாள் அமைச்சர் பொங்கல் திருநாளை முன்னிட்டு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் தன்னுடைய இளமைக்கால பொங்கல் [பண்டிகை கொண்டாட்ட அனுபவங்களை பகிர்ந்து உள்ளார். அவர் கூறி இருப்பதாவது:- தமிழர் வாழ்வில் திருநாளாக கொண்டாடப்படுவது பொங்கல் திருநாளாகும். உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யும் தமிழர் பூமியில் விளைச்சல் பெருகி வீடு சேரும் காலம் தைத்திருநாளாகும். பழயனவற்றையெல்லாம் எரித்து, பொசுக்கி விட்டு புதுமையை நோக்கி நாம் பயணிக்கத் தொடங்குகின்ற நாள் பொங்கல் திருநாள் ஆகும். இந்த நாளினை வழக்கம்போல் இன்றும் […]
போலீஸ் நிலையங்களில் வழக்கமாக கைதிகளிடம் விசாரணை, திருட்டு வழக்குகளில் பிடிபட்டவர்களிடம் முரட்டுத்தனமான விசாரணை, சமாதான பேச்சு வார்த்தை நடப்பது வழக்கம். எப்போதாவது காதல் ஜோடி தஞ்சம் என்று வந்தால் இரு தரப்பினரையும் அழைத்து பேசி காதல் ஜோடிக்கு போலீசார் திருமணம் செய்து வைப்பார்கள். இந்த் நிலையில் போலீஸ் நிலையத்தில் அங்கு பணியாற்றும் பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு வளைகாப்பு விழா நடந்து இருக்கிறது. கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் அருள்மொழி (வயது 30). இவருடைய கணவர் […]
கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் பொங்கல் விழா இன்று (13.1.2023) கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய தலைவர் பேராசிரியர் கோ. பாஸ்கர், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசியர்கள், அலுவலர்கள் மற்றும் பண்ணைத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். போங்கல் விழாவை பேராசிரியர் மற்றும் தலைவர் கோ. பாஸ்கர் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். இணை பேராசிரியர் முனைவர். கு. குரு வாழ்த்துரை வழங்கினார். பண்ணைத் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன, இவற்றில் வெற்றி […]
தமிழக பா.ஜனதா கட்சி தலைவராக தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதிலாக எல்.முருகன் நியமிக்கப்பட்டார். இதே காலகட்டத்தில் விருப்ப ஓய்வுபெற்ற கர்நாடக ஐ.பி.எஸ் அதிகாரியும், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவருமான அண்ணாமலை பா.ஜ.க.வில் இணைந்தார். பின்னர், எல்.முருகன் மத்திய இணை மந்திரியானதை அடுத்து அந்த பொறுப்புக்கு மாநில துணைத் தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டார். மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து அதிரடி அரசியல் மூலம் பா.ஜ.க.வை வளர்ப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு மாவோயிஸ்டுகள், மத தீவிரவாதிகளிடமிருந்து […]
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தூத்துக்குடி மாவட்ட திருநங்கைக்கு கிராம உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் இன்று (ஜன.13) வழங்கினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு அண்மையில் நடைபெற்றது. இத்தேர்வில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியைச் சேர்ந்த திருநங்கையான ஸ்ருதி என்பவர் தேர்வானார். தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக கிராம உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் திருநங்கை இவர் ஆவார். இவருக்கு மாவட்ட கலெக்டர் கி.செந்தில் ராஜ், […]







