தமிழகத்தின் தனித்துவத்தையும், பண்பாட்டையும் வெளிப்படுத்தும் வகையில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், ஸ்பிக் நிறுவனமும் இணைந்து ‘நெய்தல்- தூத்துக்குடி கலை விழா’ என்ற விழாவை நடத்துகிறது.இந்த விழா வருகிற 7-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை 4 நாட்கள் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. விழாவை முன்னிட்டு தினமும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை கலை விழா நடக்கிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 300 கிராமிய கலைஞர்கள் கலந்து […]
காஞ்சீபுரத்திலிருந்து 10 கிமீ தொலைவில் திருப்புட்குழி என்ற திவ்யதேசம் அமைந்துள்ளது. அவ்விடத்தில் தான் ராமபிரான் ஜடாயுவுக்கு முக்தியளித்தார்.அங்கு மரகதவல்லி தாயாருடன் கோயில் கொண்டிருக்கும் விஜயராகவ பெருமாள் அக்கோவிலில் ஜடாயுவுக்கு ஒரு தனிச் சன்னதி வழங்கியுள்ளார்.கோவிலில் நடைபெறும் உற்சவங்களில் ஜடாயுவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது சன்னதியின் முன் நின்றுதான் அத்யாபகர்கள் திவ்யப் பிரபந்த பாராயணத்தைத் தொடங்குவார்கள்.இவ்வாறு ஜடாயுவுக்கு முக்தியளித்தது மட்டுமின்றி உற்சவங்களின் போதும் அவருக்குச் சிறப்பு மரியாதை செய்யுமாறு எம்பெருமான் அருள்புரிந்திருக்கிறார்.இந்தத் தல வரலாற்றைத் திருப்புட்குழியில் வாழ்ந்த […]
சென்னை திருவான்மியூர் கடற்கரை ஓரம்…அலைகளின் கரங்கள்.. அங்கே நின்றவர்களின் கால்களை தொட்டு சென்றன.வாக்கிங் சென்ற சிலரும்..வாக்கிங்கை நிறுத்திவிட்டு அலைகளையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.அலைகள் நழுவி உள்ளே சென்றபோது…அந்த மஞ்சள் நிற சேலை…கடற்கரை மணலில் பரவிகிடந்தது. அருகில் சாய்ந்து கிடந்த நிலையில் கன்னிப்பெண் உடல்…முகம் சரியாக தெரியவில்லை.கார்மேக கூந்தல் முகத்தை பாதி மறைத்திருந்தது…வாக்கிங் வந்த முதியவர்..யார் அந்த பொண்ணு…என்னாச்சு..கடலில் குதிச்சிட்டா…இல்லை தவறி விழுந்துட்டா.. என்று அங்கு நின்றவர்களிடம் கேட்டார்.அதற்கு ஒரு பெண்..யாருக்கு தெரியும் பெரியவரே ….ஏதாவது காதல் பிரச்சினையோ..குடும்ப பிரச்சினையோ யாருக்கு […]
சுற்றுலா நகரமான கொடைக்கானல் சீசனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் அதிகம் செல்வது வழக்கம். தற்போது சீசன் நன்றாக இருக்கிறது.பள்ளிக்கூடங்கள் திறப்பு காரணமாக இதனால் சுற்றுலா பயனிகள் கூட்டம் ஓரளவு காணப்படுகிறது, சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் கொடைக்கானலில் கூட்டம் நிரம்பி வழிகிறதுதற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் முக கவசம் கட்டடாயம் அணிய வேண்டும் என்று அரசு அறிவித்து இருக்கிறது. எனினும் மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ள மாவட்டங்களில் மட்டும் மக்கள் முக கவசம […]
கோவில்பட்டி சுபா நகரில் ஸ்ரீ நித்யகல்யாண வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. நேற்று இரவு பூஜைக்கு பிறகு கோவில் நடை சாத்தப்பட்டது. இதை தொடர்ந்து அர்ச்சகர் வரதராஜ அய்யங்கார் வீட்டுக்கு கிளம்பி சென்றார்.இன்று காலை வழக்கம் போல் கோவிலுக்கு வந்த அர்ச்சகர் , கோவில் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பதறி அடித்துக்கொண்டு உள்ளே போய் பார்த்தார். சுவாமி சன்னதியில் இருந்த ஐம்பொன் சாமி சிலை திருட்டு போய் இருந்ததை கண்டு திடுக்கிட்டார். இதுபற்றி […]
கோவில்பட்டி தாலுகா இந்திய கம்யூனிஸ்டு சார்பில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது வலியுறுத்திய கோரிக்கைகள் விவரம் வருமாறு:-*சமீபகாலமாக உயர்த்தபட்ட எம்.சாண்ட் விலைஉயர்வை வாபஸ் பெறவேண்டும்.*எம்.சாண்ட் விலைநிர்ணயம் செய்யவேண்டும்.*எம்.சாண்ட் விலையை திடீரென உயர்த்திய தனியார் மணல் குவாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.*.எம்.சாண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்துவதன் மூலம் கட்டிடம் கட்டுவோர், கட்டிட தொழிலாளர்கள், எம்.சாண்ட்லாரி உரிமையாளர்கள் ஆகியோரின் வாழ்வாதாரம் காக்கப்படவேண்டும்,.மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் ஜி,பாபு […]
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார் நடிகை பவித்ரா. 43 வயதான பவித்ரா இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.ஏற்கனவே சுசீந்திர பிரசாத் என்பவரை திருமணம் செய்த பவித்ரா கடந்த 6 ஆண்டுகளாக அவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் பழம்பெரும் தெலுங்கு நடிகரான கிருஷ்ணாவின் மாற்றாந்தாய் மகனும் நடிகர் மகேஷ் பாபுவின் ஒன்றுவிட்ட சகோதரருமான நரேஷ் பாபு (வயது6௦) வை பவித்ரா திருமணம் […]
கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் மு. சகர்பான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-பொதுமக்களுக்கு தடையில்லா சீரான மின் வினியோகம் வழங்குவதற்கு ஏதுவாக சாய்ந்த மின் கம்பங்களை நிமிர்த்தல், மின் பாதிக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றுதல் போன்ற பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.எனவே, கோவில்பட்டி உபமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் நடராஜபுரம் 1 முதல் 9 வரையுள்ள தெருக்களுக்கும், படர்ந்த புளி, கங்கன் குளம், ஆலம்பட்டி ஆகிய பகுதிகளுக்கும், சிட்கோ உபமின் […]
அரிஷத்வர்கம் எனச் சொல்லப்படும் மனிதனின் ஆறு குணங்களும், மனிதனின் மனதினுள்ளேயே மறைந்திருந்து அவனை மெல்ல மெல்ல அழிக்கின்றன. அரி என்றால் எதிரி எனவும், ஷத் என்றால் ஆறு எனவும், வர்கம் என்றால் குழு எனவும் பொருள்படும். ஒவ்வொன்றும் மனிதனின் வாழ்க்கையில் மிகப்பெரும் பேரழிவை ஏற்படுத்தும் இயல்புடைய குணங்களாகும். பக்தி நிலையைப் பொறுத்தவரை கீழ்க்காணும் இந்த 6 குணங்களும் மனிதன் இறைவனின் திருவருளைப் பெற விடாமல் தடுக்கும் ‘எதிரிகள்’ எனச் சொல்லப்படுகின்றது. காமம் – தீவிர ஆசை குரோதம் […]
தமிழ் கடவுள் முருகப் பெருமானின் அறுபடைவீடுகளில் 2ம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாக திகழ்கிறது.இந்த கோவிலில் தமிழ் மாதங்களான ஆடி, புரட்டாசி தவிர மற்ற 10 மாதங்களிலும் திருவிழா நடைபெற்று வருகிறது. இது தவிர வைகாசி விசாகம், ஆவணி திருவிழா, கந்த சஷ்டி திருவிழா, மாசித் திருவிழா என நான்கு முக்கிய திருவிழாக்களும் நடக்கிறது. இதனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் […]







