சுபாநகர் கோவிலில் ரூ.2 லட்சம் ஐம்பொன் சாமி சிலை திருட்டு

 சுபாநகர் கோவிலில் ரூ.2 லட்சம் ஐம்பொன் சாமி சிலை திருட்டு

கோவில்பட்டி சுபா நகரில் ஸ்ரீ நித்யகல்யாண வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. நேற்று இரவு பூஜைக்கு பிறகு கோவில் நடை சாத்தப்பட்டது. இதை தொடர்ந்து அர்ச்சகர் வரதராஜ அய்யங்கார் வீட்டுக்கு கிளம்பி சென்றார்.
இன்று காலை வழக்கம் போல் கோவிலுக்கு வந்த அர்ச்சகர் , கோவில் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பதறி அடித்துக்கொண்டு உள்ளே போய் பார்த்தார். சுவாமி சன்னதியில் இருந்த ஐம்பொன் சாமி சிலை திருட்டு போய் இருந்ததை கண்டு திடுக்கிட்டார்.


இதுபற்றி அறிந்த கோவில்பட்டி மேற்கு போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தனர். நேற்று இரவில் மர்ம நபர்கள் கோவில் கதவை நைசாக திறந்து கோவிலுக்குள் சென்று சுவாமி சிலையை திருடி சென்றது தெரிய வந்தது. மேலும் வெள்ளி பொருட்களும் திருட்டு போய் இருந்தன. திருட்டு போன சிலையின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.
கோவிலுக்கு தினமும் வந்து நோட்டமிட்டு இந்த துணிகர திருட்டு சம்பவத்தில் மர்ம நபர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசுக்கு எழுந்துள்ளது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

மேலும் இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *