எம்.சாண்ட் க்கு விலை நிர்ணயம் கோரி இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
![எம்.சாண்ட் க்கு விலை நிர்ணயம் கோரி இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்](https://tn96news.com/wp-content/uploads/2022/07/425b80c9-f748-4461-9aa6-ccdfa39e468c-2-850x414.jpg)
கோவில்பட்டி தாலுகா இந்திய கம்யூனிஸ்டு சார்பில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது வலியுறுத்திய கோரிக்கைகள் விவரம் வருமாறு:-
*சமீபகாலமாக உயர்த்தபட்ட எம்.சாண்ட் விலைஉயர்வை வாபஸ் பெறவேண்டும்.
*எம்.சாண்ட் விலைநிர்ணயம் செய்யவேண்டும்.
*எம்.சாண்ட் விலையை திடீரென உயர்த்திய தனியார் மணல் குவாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*.எம்.சாண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்துவதன் மூலம் கட்டிடம் கட்டுவோர், கட்டிட தொழிலாளர்கள், எம்.சாண்ட்லாரி உரிமையாளர்கள் ஆகியோரின் வாழ்வாதாரம் காக்கப்படவேண்டும்,.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் ஜி,பாபு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கருப்பன், நகர செயலாளர் சரோஜா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர்,
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)