தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்பி வேலுமணி உள்ளிட்டோரும் இருந்தனர். தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் மற்றும் திமுக அரசுக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுகள் இடம் பெற்றுள்ள மனுவை கவர்னரிடம் எடப்பாடி பழனிசாமி வழங்கினார் தமிழக சட்டசபை வரும் 20-ஆம் தேதி கூடுகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், கவர்னர் உரையுடன் இந்த சட்டசபை கூடுவது வழக்கம். இத்தகைய சூழலில், […]
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே மரம் வெட்டும் தொழிலாளியாக வசிக்கும் ஒருவர், தனது இரண்டாவது மனைவிக்கு பிறந்த 15 வயது மகளை 2024-ம் ஆண்டு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பரிசோதனையில், அவர் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தது கண்டறியப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக வள்ளியூர் மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், குற்றவாளியின் […]
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீப திருவிழா அன்று தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த மாதம் 1-ந்தேதி உத்தரவிட்டார். ஆனால், சட்டம். ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று தெரிவித்து தீபம் ஏற்றப்படவில்லை.தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய […]
இன்றைய தலைமுறையினர் பலர் டிவி பார்க்காமல் இருந்து விடுவார்கள். செல்போன் இன்றி இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு செல்போன்கள் சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக மாறிவிட்டது. எனினும் இணைய வசதிதான் இதற்கு ஆக்சிஜன் போல உள்ளது. இணைய வசதி இல்லையென்றால் யூடியூபில் வீடியோ, லைவ் தொலைக்காட்சிகளை பார்க்க முடியாது.ஆனால், இதனை மாற்றும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை இந்தியா தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ‘டைரக்ட் டு மொபைல்’ என்ற புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வரும் […]
திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் இருந்து திரண்டு வந்த அவரது ஆதரவாளர்கள், திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள், சென்னை சி.ஐ.டி காலனி உள்ள இல்லத்தில் கூடினர். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு கனிமொழி மலர் தூவி மரியாதை செலுத்தினர். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் தனது கணவருடன் நேரில் வந்து […]
சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் சென்னையில் கடந்த மாதம் 26-ந்தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். சாலை மறியல், கண்களில் கருப்பு துணி கட்டியவாறும் பல்வேறு வகைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் அருகே உள்ள சிவானந்தா சாலையில் நேற்று, ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் 10-வது நாளாக மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கழுத்தில் […]
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, போட்டா ஜியோ ஆகிய அமைப்புகள் போராடி வருகின்றன. இந்த சூழலில் வருகிற 6-ந்தேதியில் இருந்து காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கப்போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளன. இந்த கூட்டமைப்புகளை அழைத்து கடந்த டிசம்பர் 22-ந் தேதி அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகிய அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே திட்டமிட்டபடி […]
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-எல்லார்க்கும் எல்லாம் என்ற சீரிய சிந்தனையோடு ஆட்சி செய்து வரும் கழகத்தலைவர், வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கழகத்தின் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் பொருட்டு , கழகத் துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., தலைமையில் அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, கோவி செழியன், சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசி, எழிலன், முன்னாள் எம்.பி டிகேஎஸ் இளங்கோவன், அப்துல்லா, கார்த்திகேய சிவசேனாபதி, கான்ஸ்டண்டைன் ரவீந்திரன், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஜி. சந்தானம், தொழிலதிபர் சுரேஷ் […]
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியில் வந்துவிட்டோம். மத்திய உள்துறை மந்திரியிடம், தமிழக அரசியல் களத்தின் நிலவரத்தை தெரிவித்திருக்கிறேன். அதிமுகவில் பிரிந்து கிடக்கிற சக்திகள் எல்லாம் ஒன்றிணைய வேண்டும். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் வளர்த்தெடுத்த இயக்கம் சிதறுண்டு போகக்கூடாது.கழக சட்ட விதிகளை கேள்விக்குறியாக்கி இருக்கிறார்கள். கழகத்தின் பொதுச்செயலாளரை, அடிப்படை தொண்டர்கள் தங்களது வாக்குகளை செலுத்தி தேர்தல் மூலம் தேர்வு செய்ய வேண்டும் என்பதுதான் சட்டவிதி. இந்த […]
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த காட்டுக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன் (43 வயது). இவரது மனைவி கலையரசி (33 வயது). இவர்களுக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இந்த தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் மனைவி கலையரசியின் நடத்தையில் கருணாகரனுக்கு சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கலையரசி சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றுள்ளார். நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு பிறகும் […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







