பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு புதிய பதவி கொடுத்த ஓபன்னீர்செல்வம்; கட்சியில் இருந்து நீக்கினார் எடப்பாடி
கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த நேரத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அலுவலகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.பின்னர் ஐகோர்ட்டு உத்தரவின்படி அந்த ‘சீல்’ அகற்றப்பட்டு, சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த தீர்ப்பு ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனைத்தொடர்ந்து 72 நாட்களுக்கு பிறகு […]







