டெல்லியில் 21 நாட்களாக போராட்டம்: சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில்
நீட் வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. இந்த போராட்டக்குழுவினர் வருகிற 20-ந்தேதி நாடாளுமன்றத்துக்கு பேரணியாக சென்று மனு கொடுக்க திட்டமிட்டுள்ள நிலையில், அதுவரை தான் எப்படியும் உயிருடன் இருப்பேன் என வாங்சுக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ஆதரவாளர்களுடன் அவர் பேசும்போது, ‘நான் […]







