ரெஸ்டோ பார் திட்டம் தேவையில்லை; அன்புமணி ராமதாஸ்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில்… நடைமுறையில் இருப்பதைப் போன்று தமிழ்நாட்டிலும் உணவங்களுடன் குடிப்பகங்களும் இணைக்கப்பட்ட ரெஸ்டோ பார்களை… அமைக்க உரிமம் வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாகவும், இது குறித்த அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்படும் என்றும் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. பெரும் கேட்டை விளைவிக்கும்.. திட்டம் குறித்த இந்த செய்திகள் உண்மையா? என்பதை அரசு விளக்க வேண்டும்….

தமிழ்நாட்டில் தற்போது 3 நிலைகளில் மது குடிப்பகங்கள் அனுமதிக்கப்படுகின்றன. அரசு மதுக்கடைகளுடன் இணைந்த குடிப்பகங்கள்.. HL 1 என்ற உரிமத்துடனும், மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரிலான குடிப்பகங்கள் HL2 என்ற உரிமத்துடனும், நட்சத்திர விடுதிகளில் உள்ள குடிப்பகங்கள் HL3 என்ற உரிமத்துடனும் இயங்கி வருகின்றன. இவை அனைத்திலும் கடுமையான விதிமீறல்களும், சட்டவிரோத மது விற்பனையும் நடைபெற்று வருவதால் அவற்றை மூட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியும், நலவாழ்வு ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் கூடுதலாக ரெஸ்டோ பார்களை அனுமதிக்கவும், அவற்றுக்காக HL3A என்ற … உரிமத்தை வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதும் பிற்போக்குத்தனமான செயல்களாகும்….
ரெஸ்டோ பார்களை திறப்பதற்காக அரசுத் தரப்பின் வாதங்களாக கூறப்படுபவை ஏற்றுக்கொள்ளவே முடியாதவை ஆகும்…. அரசு மதுக்கடைகளுடன் இணைந்த குடிப்பகங்கள் சுகாதாரமானவையாக இல்லை; மனமகிழ் மன்றங்களில்.. உறுப்பினர்களுக்கு மட்டும்தான் மது வழங்கப்பட வேண்டும் என்ற விதியை மீறி அனைவருக்கும் மது மற்றும் உணவு வகைகள்.. வழங்கப்படுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது; இவற்றை ஒழுங்குபடுத்துவதற்காகத்தான் ரெஸ்டோ பார்கள்…
திறக்கப்படவுள்ளதாக அரசு அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த வாதங்கள் அபத்தமானவையாகும்….
புதிய வகை குடிப்பகங்களை திறக்க முனைவது மோசமான முன்னுதாரணமாக அமைந்து விடும். இந்த வரலாற்றுத் தவறை த.வெ.க அரசு செய்யக் கூடாது. மாணவர்கள், இளம்பெண்கள் போன்றவர்களும் ரெஸ்டோ பார்களுக்கு தயக்கமின்றி செல்லும் நிலை ஏற்பட்டு விடும். இது மிகவும் ஆபத்தானதும், சமூகக் கேடானதும் ஆகும்
அதிக வசதிகளுடன் ரெஸ்டொ பார்களை திறப்பது, வெளிமாநிலங்களில் இருந்து புதிய மது வகைகளை வாங்கி வினியோகம் செய்வது தமிழ்நாட்டில் மதுப்புழக்கத்தை அதிகரிக்கவே செய்யும் என்பதை தமிழக அரசு உணர வேண்டும்….
தவெக அரசு ரெஸ்டோ பார் எனும் புதிய வகை மதுக்குடிப்பங்களை அறிமுகம் செய்தால் அது அரசுக்கு தீராத அவப்பெயரை ஏற்படுத்தி விடும்…

சமூகக் கேடுகளையும், புதிய குடிகாரர்களையும் உருவாக்கும் ரெஸ்டொ பார்களை அமைப்பதற்கு உரிமம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். இல்லாவிட்டால், மக்களுக்கு கேடான இந்தத் திட்டத்திற்கு.. எதிராக சட்ட மற்றும் அரசியல் போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி முன்னெடுக்கும்.
இவ்வாறு .அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்…







