தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து
விதிமீறல்கள் மற்றும் நிர்வாக காரணங்களால் தமிழகத்தில் பல்வேறு நகராட்சிகளுக்கு உட்பட்ட 50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அறிவித்துள்ளது.

முதலமைச்சர் ஜோசப் விஜய் வசம் உள்ள நகராட்சி நிர்வாகத்துறையின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டெண்டர்களைக் கோரி அவற்றைச் சமர்ப்பிப்பதற்கு 1 முதல் 4 நாட்கள் வரை மட்டுமே குறுகிய கால அவகாசம் வழங்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
இந்த விதிமீறல் புகார்களை தொடர்ந்து, நிர்வாக காரணங்களுக்காக இந்த டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வறிவிப்பின்படி உடுமலைப்பேட்டை நகராட்சியில் 30 டெண்டர்களும், கோத்தகிரி நகராட்சியில் 3 டெண்டர்களும், செங்கம் நகராட்சியில் 2 டெண்டர்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் மணப்பாறை, பெரம்பலூர், திருவள்ளூர், திருவையாறு உள்ளிட்ட நகராட்சிகளில் 20-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த டெண்டர்கள் அனைத்தும் நகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட கழிவுநீர் வடிகால் பராமரிப்பு, குடிநீர் இணைப்பு பணி, வாரச்சந்தை கடைகள் ஏலம் மற்றும் புதிய போர்வெல் அமைக்கும் பணிகள் தொடர்புடையவை ஆகும்.







