துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு விழாக்களில் தமிழ் கலாசார உடை அணிய வேண்டும் என்று உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில், சேலையூரைச் சேர்ந்த வக்கீல் சத்தியகுமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “1949-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தி.மு.க., தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை மேம்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில் 1967-ம் ஆண்டு தமிழ்நாட்டில் தி.மு.க., ஆட்சியை பிடித்தது. அப்போது தி.மு.க., தலைவராகவும், முதல்-அமைச்சராகவும் இருந்த அறிஞர் அண்ணா, […]
கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் உட்கோட்டத்தில் பணிபுரியும் [போலீசாருக்கு பணியின் போது ஏற்படும் மன அழுத்தத்தை போக்கி மன உறுதி அளித்திடவும்தற்கொலைகளை தடுக்கவும், பணியினால் காவலர்கள் உடலில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்குமான யோகா பயிற்சி டி.எஸ்.பி அலுவலகம் எதிரே அமைந்துள்ள மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது முதுகு வலியை போக்குவதற்காக தனு சிரசாசனம்,மனதை ஒரு நிலை படுத்த யோக முத்ரா,, சீரான சத்தியை அதிகரிக்க பச்சிமோத்தாசனம், சூரிய நமஸ்காரம் லாபிங் தெரபி, […]
தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1-ம் தேதி அன்று விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இவ்வாண்டு தீபாவளியை (31.10.2024) அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள். ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனை கருத்தில் கொண்டு (01.11.2024) அன்று ஒரு நாள் மட்டும்., […]
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். அவர் இரு தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். பின் அவர் ரேபரேலி தொகுதி எம்.பி.யாகவே பதவியேற்றார். வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் வயநாடு மக்களவை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதிக்கு வருகிற நவம்பர் 13-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான […]
தென் மாநில காவல்துறை இயக்குனர்கள், படைத்தலைவர்கள் பங்கேற்ற தென் மாநில காவல்துறை ஒருங்கிணைப்பு மாநாடு சென்னை கிண்டியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, அந்தமான் ஆகிய மாநில காவல்துறை இயக்குனர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- சட்டம் – ஒழுங்கு, பாதுகாப்பு, நீர் மேலாண்மை போன்ற பல்வேறு விவகாரங்களில் தென் மாநிலங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம். போதைப்பொருட்கள், […]
கனமழை காரணமாக சென்னை கதீட்ரல் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா கடந்த 15-ந்தேதி முதல் மூடப்பட்டிருந்தது. தற்போது மழை குறைந்து இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து பொதுமக்களின் பார்வைக்காக கலைஞர் நூற்றாண்டு பூங்கா திறக்கப்படுகிறது. அதன்படி, இன்று (சனிக்கிழமை) முதல் பூங்கா வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் விடுமுறை நாள் என்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்க கலைஞர் நூற்றாண்டு பூங்காவிற்கான நுழைவுச்சீட்டு (https://tnhorticulture.in/kcpetickets) இணையதளம் வாயிலாக பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. பறவையகம் […]
மத்திய அரசு இந்தியை திணிப்பதாக கூறி தி.மு.க. கூட்டணி கட்சிகள் அவதூறு பிரசாரம் செய்து வருவதாக மத்திய இணை மந்திரி எல்.முருகன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- சென்னை தூர்தர்ஷன் டிடி தமிழ் சேனலில் இந்தி வார நிறைவு விழாவில் பங்கேற்ற தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழ்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை செய்ததாக கூறி வன்மத்தை கக்கும் விதமாக குற்றச்சாட்டு சுமத்திய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வன்மையாக கண்டிக்கிறேன். டிடி தமிழ் தொலைக்காட்சி நிலையத்தில் […]
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 1.7.2024 முதல் 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது; – “நாட்டிற்கே வழிகாட்டும் வகையில் பல முன்னோடி நலத்திட்டங்களை மக்கள் நலன் கருதி சிறப்புற நடைமுறைப்படுத்துவதில் பெரும் பங்காற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை இந்த அரசு கருத்தில் கொண்டு, அவர்களது நலன் காக்கும் வகையில் பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. […]
இந்தி பேசாத மாநிலங்களில் ‘இந்தி மாதம்’ கொண்டாடப்படுவதைத் தவிர்க்கக்கோரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது; சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா நிகழ்ச்சிகளுடன் இணைந்து 18-10-2024 அன்று நிறைவடையும் ‘இந்தி மாத’ நிறைவுவிழா நடைபெறுவது குறித்து தங்களின் கவனத்திற்குக் கொண்டுவரவே நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். அந்த விழாவிற்கு தமிழக கவர்னர் தலைமை தாங்கி நடத்த இருக்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த மொழிக்கும் தேசிய மொழி என்ற […]
சென்னையில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி துவங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதில், “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரியை விட்டு பாடியதால் சர்ச்சை கிளம்பியது. இந்த நிலையில்,சட்டப்படி நடக்காமல் இஷ்டப்படி நடப்பவர் கவர்னர் பதவியை வகிக்கவே தகுதியற்றவர் என்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் காட்டமாக விமர்சித்துள்ளார்.. >இது தொடர்பாக தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:- திராவிடம் என்ற […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







