சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மாநில அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்ட விரோதமானது என, அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் அதிகாரிகளை துன்புறுத்த தடை கோரியும், சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தினர்.. சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சிலர் ஈடுபட்டதாக தகவல் கிடைத்ததால் […]
நில அபகரிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக பதவி வகித்த டி.ஜெயக்குமார், தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தியும், அடியாட்களை வைத்து மிரட்டியும் தனது நிலத்தை அபகரித்து கொண்டதாக, அவரது மருமகன் நவீன்குமாரின் சகோதரர் மகேஷ் காவல் துறையில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார், ஜெயக்குமார், அவரது மகள் ஜெயப்பிரியா, மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை […]
தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. 22-4-2025 மற்றும் 23-4-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 24-4-2025 முதல் 28-4-2025 வரை: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை […]
தமிழ்நாட்டில் டாஸ்மாக் விற்பனை கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.2,489 கோடி அதிகரித்துள்ளதாக தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் கடந்த 2024 – 2025ம் நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் 48,344 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. அயல்நாட்டு மதுபானங்களை இறக்குமதி செய்ததன் மூலமாக 2024-25 -ஆம் ஆண்டில் (31.03.2025 வரை) சிறப்புக் கட்டணமாக அரசுக்கு ரூ.62.88 கோடி மற்றும் சேவைக் கட்டணமாக தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்திற்கு ரூ.32.52 லட்சம் வருவாய் […]
திருநெல்வேலி ஜே.சி.ஐ. கிளாசிக் மற்றும் ஜே.காம் இணைந்து மும்மடங்கு தொழில் வளர்ச்சி பெறுவது எப்படி? என்பது பற்றிய பயிற்சி அரங்கத்தை நடத்தியது திருநெல்வேலி பால்மைரா கிராண்ட் இன் ஹோட்டலில் நடந்த இந்த பயிற்சி அரங்கில் தொழில் முனைவோர்கள் பலர் கலந்து கொண்டனர். தொடக்கத்தில் ஜே.காம் தலைவர் ஜேசு மரிய அந்தோணி வரவேற்று பேசினார். ஜே.சி.ஐ.கிளாசிக் தலைவர் நெல்லை முருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஜே.சி.ஐ. பிசினஸ் டிரெய்னர் ஆடிட்டர் டி.எஸ்.மகாராஜ் பங்கேற்றார். அவரை அறிமுகபடுத்தி முத்துராஜ் […]
தங்கம் விலை கடந்த 9-ந்தேதியில் இருந்து தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த 9-ந்தேதி, ஒரு கிராம் தங்கம் ரூ.8 ஆயிரத்து 410-க்கும், ஒரு பவுன் ரூ.67 ஆயிரத்து 280-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு, 10-ந்தேதி ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 560-க்கும், ஒரு பவுன் ரூ.68 ஆயிரத்து 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றும் தங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது. பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560க்கும், கிராம் ரூ.25 உயர்ந்து ரூ.8,945க்கும் விற்பனை செய்யப்பட்டது. […]
கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்து வந்தவர் போப் பிரான்சிஸ்(வயது 88). இவருக்கு கடந்த பிப்ரவரி 14-ம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவருக்கு சுவாச குழாயில் பாதிப்பு ஏற்பட்டது. மேலும், வைரசுகள், பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகள் என பல வகையான தொற்று பாதிப்பும் ஏற்பட்டிருந்தது. மருத்துவமனையில் 5 வாரங்களுக்குமேலாக சிகிச்சையில் இருந்து போப் பிரான்சிஸ் உடல்நலம் தேறிய நிலையில் […]
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது, கூடலூர் தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன், தனது தொகுதியில் சிறு தகவல் தொழில்நுட்ப பூங்கா ஒன்று அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்து பேசிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், “இந்த கூட்டத் தொடரிலேயே எனது துறையில் உள்ள சிக்கல்களை தெரிவித்து இருக்கிறேன். நிதி குறைவாக ஒதுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களைப்போல் தொழில்நுட்ப பூங்காக்கள் எங்கள் துறையின் கீழ் வருவதில்லை. டைடல் பூங்கா […]
ம.தி.மு.க. முதன்மைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து, துரை வைகோ நேற்று விலகுவதாக அறிவித்தார். தன்னால் இயக்கத்திற்கோ, இயக்க தந்தை வைகோவுக்கோ எள் முனை அளவு கூட சேதாரம் வந்து விடக்கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுத்து இருப்பதாகவும், மறுமலர்ச்சி திமுகவின் முதல் தொண்டனாக இருந்து கட்சிக்காக உழைப்பேன் என்றும் அறிக்கை யில் கூறி இருந்தார். இந்த நிலையில் இன்று சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில், அவைத்தலைவர் அர்ஜுன் ராஜ் தலைமையில் மதிமுக நிர்வாகக் குழு […]
கோவில்பட்டி கடலையூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையில் துணிகர திருட்டு சம்பவம் நடந்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு விற்பனையாளர்கள் சென்றனர். மறுநாள் காலை கடை திறக்க வந்தபோது கடையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கடைக்குள் சென்று பார்த்தபோது 25 மதுபாட்டில்கள் திருட்டுப் போயிருந்தது தெரிய வந்தது. வெள்ளிக்கிழமை அன்று கடையில் வசூலான பணத்தை எடுத்து சென்று விட்டதால் அந்த பணம் தப்பியது. கல்லாப்பெட்டியில் 50 ரூபாய் மட்டும் […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







