மும்மடங்கு தொழில் வளர்ச்சி பெறுவது எப்படி? பயிற்சி அரங்கம்




திருநெல்வேலி ஜே.சி.ஐ. கிளாசிக் மற்றும் ஜே.காம் இணைந்து மும்மடங்கு தொழில் வளர்ச்சி பெறுவது எப்படி? என்பது பற்றிய பயிற்சி அரங்கத்தை நடத்தியது
திருநெல்வேலி பால்மைரா கிராண்ட் இன் ஹோட்டலில் நடந்த இந்த பயிற்சி அரங்கில் தொழில் முனைவோர்கள் பலர் கலந்து கொண்டனர். தொடக்கத்தில் ஜே.காம் தலைவர் ஜேசு மரிய அந்தோணி வரவேற்று பேசினார். ஜே.சி.ஐ.கிளாசிக் தலைவர் நெல்லை முருகன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக ஜே.சி.ஐ. பிசினஸ் டிரெய்னர் ஆடிட்டர் டி.எஸ்.மகாராஜ் பங்கேற்றார். அவரை அறிமுகபடுத்தி முத்துராஜ் பேசினார். கோவில்பட்டி ஜே.காம் சேர்மன் எம்.செல்வலட்சுமியை அறிமுகப்படுத்தி மனோஜ்குமார் பேசினார்.
பயிற்சி அரங்கத்தில் ஜே.சி.ஐ.பயிற்சியாளர் அருண்குமார், திருநெல்வேலி ஜே.காம் முன்னாள் தலைவர் சகாய விவேக், துணை தலைவர் ரிஷி, செயலாளர் ராகுல், கோவில்பட்டி ஜே.காம் முன்னாள் சேர்மன் பிசியோ டாக்டர் உதயலட்சுமி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காலை முதல் மாலை வரை நடந்த இந்த பயிற்சி அரங்கத்தில் தொழில் வளர்ச்சிக்கான ஆலோசனைகளை ஆடிட்டர் மகாராஜ் வழங்கினார்., முதலில் தொழில் முனைவோரிடம் செய்யும் தொழில், எந்த காலகட்டத்தில் லாபம் அதிகம் இருந்தது, எந்த வருடத்தில் தொழில் அமோகமாக இருந்தது,எதிர்கால இலக்கு என்ன என்பது பற்றி கேட்கப்பட்டது. ஒவ்வொரும் தனித்தனியாக பதில் அளித்தனர்.
தொடர்ந்து ஜே.சி.ஐ. பிசினஸ் டிரெய்னர் ஆடிட்டர் டி.எஸ்.மகாராஜ் பேசியதாவது:-
ஒவ்வொரு தொழில் முனைவோரும் தங்கள் அருகாமையில் உள்ள வளங்கள் மற்றும் வலையமைப்புகளை பயன்படுத்தி வளர்ச்சியை நோக்கி செல்லலாம்.நான் எனது பிசினசில் தனித்துவம் ஆனவன் என்பதை மனதில் கொள்ள வேண்டும்,
உங்கள் தொழிலில் உள்ள சிறப்புகள் வெளியே தெரிகிறதா? உங்கள் தயாரிப்புகள் சரியான நேரத்தில் போய் சேருகிறதா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நம்ம பிசினசில் ஆவரேஜ் இருக்க கூடாது, டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்ய வேண்டும்.
இவ்வாறு மகாராஜ் பேசினார்.
இதை தொடர்ந்து கோவில்பட்டி ஜே.காம் சேர்மனும், கைரா டெக்னாலஜிஸ் நிறுவனருமான எம்.செல்வலட்சுமி டிஜிட்டல் மார்கெட்டிங் சிறப்புகள் பற்றியும், ஒவ்வொரு தொழில் முனைவோரும் தங்களை எப்படி வெளி உலகில் முன்னிலைப்படுத்தி சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மற்றும் போஸ்டர்கள் போடுவது பற்றி விளக்கி கூறினார்.
இறுதியில் ஜே.சி.ஐ. பிசினஸ் டிரெய்னர் ஆடிட்டர் டி.எஸ்.மகாராஜ் மும்மடங்கு தொழில் வளர்ச்சிக்கான உறுதி மொழிகள் வாசித்தார்,அதை திரும்ப சொல்லி அனைவரும் உறுதிமொழி எடுத்துகொன்டனர்.
*எனது வணிகத்தில் நான் ஒரு விதிவிலக்கான நபர்
*ஒவ்வொரு முடிவிலும் வளர்ச்சி மனநிலையை கடைப்பிடிக்க நான் உறுதிமொழி எடுக்கிறேன்
* மும்மடங்கு வணிகத்தை அடைவதில் நம்பிக்கை வைத்துள்ளேன்.
*எனது சந்தை எனக்குத் தெரியும்
*வாடிக்கையாளர் கவனம் செலுத்தும் தீர்வுகள் எனது முன்னுரிமையாக இருக்கும்.
*பயனுள்ளவை மற்றும் சாத்தியமான அனைத்து வகைகளிலும் நிலையான செயல்பாட்டு செயல்முறை செயல்படுத்தப்படும்
*பணத்தை வைத்து பணம் சம்பாதிப்பது பற்றி அறிவேன்,
*எனக்கு ஒரு பட்ஜெட் மற்றும் பகுப்பாய்வு உள்ளது
*என்னிடம் வேலை பார்ப்பவர்கள் எனது பலம்
* உள் வாடிக்கையாளர்களை நல்லமுறையில் நான் கவனித்துக்கொள்கிறேன்
*உள் வாடிக்கையாளர்கள் எனது வெளிப்புற வாடிக்கையாளர்களை கவனித்துக்கொள்கிறார்கள்
*வெளிப்புற வாடிக்கையாளர்கள் எனது வணிகத்தை கவனித்துக்கொள்கிறார்கள்
*எனது வணிகம் எனது லாபங்களை கவனித்துக்கொள்கிறது
எனது லாபங்கள் என்னை கவனித்துக்கொள்கின்றன
இவ்வாறு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.


