எஸ்.ஐ தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு; தூத்துக்குடியில் நடக்கிறது

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 1299 காவல் சார்பு ஆய்வாளர் பதவி (எஸ்.ஐ.) தேர்விற்கான நேரடி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
இந்த பயிற்சி வகுப்புகள் தூத்துக்குடி கோரம்பள்ளம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 23.4.2025 ( புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு தொடங்கப்பட உள்ளது.
பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள வரும் மாணவர்கள் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் 23.04.2025 அன்று அலுவலகத்திற்கு நேரில் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
இந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் போட்டி தேர்வர்கள் அனைவரும் கீழ்க்கண்ட Google படிவத்தை பூர்த்தி செய்யவும். https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeeYRn19E6Cfbb8UOaGA0qOSeai6WeJH_GgNxxUahneGk1h2w/viewform?usp=dialog
சிறப்பம்சங்கள்
*ஸ்மார்ட் போர்டு உதவியுடன் வகுப்பு.
*அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்கள்.
*போட்டித் தேர்வு புத்தகங்கள் அடங்கிய இலவச நூலகம்.
*வார மாதிரி தேர்வுகள்.
*முழு மாதிரி தேர்வுகள்.
*Study Hall வசதி உள்ளது.
மேலும் தகவலுக்கு 0461-2003251 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


