• May 21, 2025

தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிப்பு; குஜராத்தில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை

 தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிப்பு; குஜராத்தில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை

தமிழகத்தில் தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி முக்கிய தொழிலாகும். இந்த தொழிலில் சுமார் 60 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் உப்பு தமிழ்நாடு மட்டுமல்லாது, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கும் ஏற்றுமதி  செய்யப்படுகிறது,

பருவம் தவறிய  மழை மற்றும்,  வானிலை மாற்றம் போன்றவற்றால் , ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் தொடங்க வேண்டிய உப்பு உற்பத்தி மார்ச் மாதம் தொடங்கி ஒரு சில நாட்களிலேயே மீண்டும் உப்பு உற்பத்தி பாதிக்கப்ட்டது.

தூத்துக்குடியில் இன்னும்  முழுமையான உப்பு உற்பத்தி  தொடங்கப்படவில்லை. அங்கு உப்பு உற்பத்தி 60 சதவீதம் வீழ்ச்சி அடைந்ததால் . விலையும் இரு மடங்கு உயர்ந்து ஒரு டன் (ஆயிரம் கிலோ) ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் என்ற நிலையில் உள்ளது.

இந்த நிலையில், உப்பு உற்பத்தியில் நாட்டில் முதலிடம் வகிக்கும் குஜராத்தில் ஒரு டன் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.4,500 என்ற விலையில் கிடைக்கிறது. எனவே தூத்துக்குடிக்கு 40 ஆயிரம் டன் உப்பு குஜராத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது..

மேலும், 30 ஆயிரம் டன் உப்பு கொண்டுவரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குஜராத்தில் இருந்து  உப்பு இறக்குமதி செய்து விற்கவேண்டிய கட்டாயத்துக்கு உப்பு உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, உப்பு உற்பத்தியாளர்கள் கூறும்போது, உப்பு உற்பத்தி பாதிப்பினால் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டு கடுமையயான பாதிப்புக்கு ஆளாகிறார்கள். எனவே உப்பு தொழிலாளர்களுக்கு  தனி வாரியம் அமைத்துதர அரசிடம் கோரிக்கை விடுத்துவருகிறோம். அரசு அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *