ஒரு பவுன் தங்கம் ரூ.72 ஆயிரத்தை கடந்தது

தங்கம் விலை கடந்த 9-ந்தேதியில் இருந்து தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த 9-ந்தேதி, ஒரு கிராம் தங்கம் ரூ.8 ஆயிரத்து 410-க்கும், ஒரு பவுன் ரூ.67 ஆயிரத்து 280-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு, 10-ந்தேதி ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 560-க்கும், ஒரு பவுன் ரூ.68 ஆயிரத்து 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்றும் தங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது. பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560க்கும், கிராம் ரூ.25 உயர்ந்து ரூ.8,945க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றும் வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்து உள்ளது. அதாவது, கிராமுக்கு ரூ.9 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை, பவுரனுக்கு ரூ.72 ஆயிரத்தை தாண்டியது,
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.560 உயர்ந்து சவரன் ரூ.72,120க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ.70 உயர்ந்து ரூ.9,015க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோவில்பட்டியிலும் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.9,015க்கும். ஒரு பவுன் ரூ.72,120க்கும் விற்பனையாகிறது.
