கோவில்பட்டியில் டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு

Oplus_16908288
கோவில்பட்டி கடலையூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையில் துணிகர திருட்டு சம்பவம் நடந்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு விற்பனையாளர்கள் சென்றனர்.
மறுநாள் காலை கடை திறக்க வந்தபோது கடையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கடைக்குள் சென்று பார்த்தபோது 25 மதுபாட்டில்கள் திருட்டுப் போயிருந்தது தெரிய வந்தது. வெள்ளிக்கிழமை அன்று கடையில் வசூலான பணத்தை எடுத்து சென்று விட்டதால் அந்த பணம் தப்பியது. கல்லாப்பெட்டியில் 50 ரூபாய் மட்டும் இருந்ததை கண்ட திருட்டு கும்பல் ஆத்திரத்தில் அந்த ரூபாய் நோட்டை கிழித்து எறிந்தது. மேலும் ஐந்து ரூபாய் நாணயங்கள் இருந்த பிளாஸ்டிக் பையை வீசி எறிந்தனர்.
மதுக்கடையில் திருட வந்து ஒன்றும் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்த திருட்டு கும்பலை சேர்ந்தவர்கள், போலீசிடம் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக தடயங்களை அழிக்க முயன்றனர். அதன்படி கடைக்குள் இருந்து சிசிடிவி கேமராவை உடைத்ததுடன் ஹார்ட் டிஸ்கையும் எடுத்துக் கொண்டனர்.மேலும் ஆங்காங்கே மிளகாய்பொடியை தூவி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று இருக்கிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


