சென்னையில் இருப்பதை விடவும், மாவட்டங்களில் அதிக நாட்களை செலவிடுங்கள்; அமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு
தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று(சனிக்கிழமை) சென்னை கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சி வளர்ச்சி மற்றும் ஆக்கப் பணிகள் குறித்தும், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து \முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- நம்முடைய பலமே, நம்முடைய கழகக் கட்டுமானம்தான். இத்தகைய நிர்வாகக் கட்டமைப்பு எந்த கட்சிக்கும் கிடையாது. அந்த கட்டமைப்பை காலம் தோறும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறோம்; இருக்க […]







