கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி மாவட்ட ஆளுநர் தினேஷ் பாபு தலைமை தாங்கினார்.கல்லூரி செயலாளர் கண்ணன்,ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் பரமேஸ்வரன், தலைவர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார். விருதுநகர் சுற்றுச்சூழல் ஆர்வலர் ராஜவல்லி ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வீடுகளிலிருந்து பெறப்படும் குப்பைகளை மக்கும் […]
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் நாளை (புதன்கிழமை) பொது வேலைநிறுத்தம் அறிவித்துள்ளன. மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்த உள்ள 4 சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது. தமிழ்நாட்டில் இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி., […]
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வந்த நிகிதா என்ற பெண், கோவில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணைக்கு அஜித்குமாரை அழைத்துச்சென்ற போலீசார், அவரை 2 நாள் சட்டவிரோதமாக காவலில் அடைத்து வைத்து கொடூரமாக தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த சூழலில் மதுரை திருநகரைச் சேர்ந்த […]
“தன்னை ஒரு ராஜாவாக கருதி பொதுக்கூட்டத்தில் பேசக்கூடாது’:பொன்முடிக்கு ஐகோர்ட்டு நீதிபதி கடும் கண்டனம்
முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவம் மதங்களை அவதூறாக பேசியது சர்ச்சையானது. இந்த நிலையில், ஐகோர்ட்டு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், இதற்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார். பின்னர், இந்த வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தார். அவர், இந்த வழக்கை விசாரிக்க ஐகோர்ட்டு நீதிபதி பி.வேல்முருகனை நியமித்து உத்தரவிட்டார். இதன்படி இந்த வழக்கு நீதிபதி பி. வேல்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் பி.எஸ். ராமன் ஆஜராகி, […]
கடலூர் செம்மங்குப்பம் அருகே பள்ளிக்கூட வேன் ஒன்று மாணவ, மாணவிகளை ஏற்றி கொண்டு இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது, வழியில் ரெயில்வே கேட் ஒன்று இருந்தது. அதன் வழியே அந்த பள்ளி வேன் கடந்து செல்ல முயன்றது. அப்போது அந்த வழியே சிதம்பரம் நோக்கி சென்ற ரெயில், பள்ளிக்கூட வேன் மீது மோதியது.இதில் வேனின் ஒருபகுதி நொறுங்கியது. மேலும் பல மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டது. இதில் வேனில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதை பார்த்து […]
நாடு தழுவிய அளவில் வரும் 9-ம் தேதி வேலை நிறுத்தம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில் தமிழகத்தில் உள்ள தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளன. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, தொழிலாளர் விரோத சட்டங்கள் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவிலான வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மக்கள் விரோத மற்றும் தொழிலாளர் விரோத போக்கைக் கண்டித்து வேலைநிறுத்தம் நடத்தப்படுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இந்த […]
“மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” : மேட்டுப்பாளையத்தில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் தொடங்கினார்
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை தொடங்கினார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை தொடங்கினார். வனபத்திரகாளி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சுற்றுப்பயணத்தை தொடங்கினார். அதை தொடர்ந்து தேக்கம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்து, விவசாயிகளுடன் கலந்துரையாடினார். மாலை 4.35 மணிக்கு, மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலை, காந்திசிலை அருகே ரோடுஷோவில் கலந்து கொண்டு பொது மக்களை சந்திக்கிறார். மாலை 5 மணிக்கு மேட்டுப்பாளையம் […]
கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ஆண்டி அம்பலத்தை விட 11 ஆயிரத்து 932 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் ஆண்டி அம்பலம், சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. நத்தம் விஸ்வநாதன், தனது வேட்புமனுவில் பல தகவல்களை […]
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே பெரியகுளம் கிராமத்தில் ஆண்டுதோறும் மொகரம் பண்டிகையில் இஸ்லாமியர்களுடன் இந்துக்களும் இணைந்து, சமூக நல்லிணக்கத்தை போற்றும் நிகழ்வாக மதநல்லிணக்க பூக்குழி இறங்கும் விழா நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டும் மொகரம் பண்டிகையை முன்னிட்டு மதநல்லிணக்க பூக்குழி இறங்கும் விழா நடைபெற்றது. ஆண்கள் பூக்குழி இறங்கியும், பெண்கள் தலையில் முக்காடு அணிந்து தீக்கங்குகளை தலையில் போட்டும் மாமுனாச்சியை வேண்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். இது குறித்து பெரியகுளம் கிராம மக்கள் கூறியதாவது:-, “பல […]
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் கிழவிபட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ16லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடைபெற்றது. அங்கன்வாடி மையத்தை முன்னாள் அமைச்சர்,சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றினார் . தொடர்ந்து, குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்கினார். நிகழ்ச்சியில் கோவில்பட்டி யூனியன் முன்னாள் துணைத்தலைவர்,அதிமுக மத்திய ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கவியரசன், அதிமுக […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







