“மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” : மேட்டுப்பாளையத்தில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் தொடங்கினார்
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை தொடங்கினார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.
வனபத்திரகாளி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சுற்றுப்பயணத்தை தொடங்கினார். அதை தொடர்ந்து தேக்கம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்து, விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

மாலை 4.35 மணிக்கு, மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலை, காந்திசிலை அருகே ரோடுஷோவில் கலந்து கொண்டு பொது மக்களை சந்திக்கிறார்.
மாலை 5 மணிக்கு மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் பிரச்சார வாகனத்தில் நின்றவாறு பொதுமக்களிடையே உரையாற்றுகிறார்
மாலை 5.40 மணிக்கு காரமடை பேருந்து நிறுத்தம் அருகில் பிரச்சார வாகனத்தில் நின்றவாறு பொதுமக்களிடையே உரையாற்றுகிறார்.

மாலை 6.40 மணிக்கு கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் பொதுமக்களிடையே உரையாற்றுகிறார்.
எடப்பாடி பழனிசாமி 33 சட்டமன்றத் தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். இந்த பிரசார பயணம் ஜூலை 23ல் பட்டுக்கோட்டையில் நிறைவுபெறுகிறது..
எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.







