தூத்துக்குடி மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில் 112 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இன்று திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் என்பதால் வழக்கத்தை விட கூட்டம் குறைவாக இருந்தது.

பொதுமக்களிடமிருந்து கல்வி உதத்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 112 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவுறுத்தினார்.

முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 14 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார்.
இக்கூட்டத்தில், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான் மற்றும் அரசுதுறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.







