ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படம் ‘தர்மன்’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது. படத்தின் தலைப்பும், பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவருமே கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேல் இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாகத் திகழ்பவர்கள். இந்த இருபெரும் நாயகர்களுக்கு இடையேயான நட்பு அரிதானது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் பிரியமும் மரியாதையும் அபூர்வமானது. கமல்ஹாசன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் இந்தத் […]
கோவில்பட்டி நகரில் முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் ஒவ்வொரு நாளும் பெருகிக்கொண்டே இருந்ததால் போக்குவரத்து நெருக்கடி மற்றும் விபத்துக்கள் மக்கள் கடும் துயரத்தை அனுபவித்து வருகிறார்கள். ஆக்கிரமிப்புகளை கண்டும் காணாமல் இருக்கும் நகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறையை கண்டித்து பல்வேறு அமைப்புகள் போராட்டம் அறிவித்ததன் காரணமாக நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று ஜூன் 24 முதல் மூன்று நாட்கள் தொடர்ந்து கோவில்பட்டி நகரில் முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் […]
கவியரசு கண்ணதாசன் 100-வது பிறந்தநாள் இன்று ஜூன் 24 கொண்டாடப்பட்டு வருகிறது இதை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை, தியாகராய நகரில் உள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், அமைச்சர்கள் என்.ஆனந்த், பி.வெங்கடரமணன், நெ.மரிய வில்சன், திரு.ரா.குமார்* அவர்கள், எஸ்.தியாகராஜன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் […]
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சிறப்புத் தரிசனக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாகச் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகிப் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்துப் புதிய விளக்கமளித்துள்ள இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், திருச்செந்தூர் கோவிலில் தரிசனக் கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கோவில் நிர்வாக நடைமுறைகள் மற்றும் வருவாய் விபரங்களை மேம்படுத்துவது தொடர்பாக, தரிசனக் கட்டண மாற்றங்கள் குறித்துப் […]
தமிழக அரசின் ‘வெற்றித் தமிழகம்’ தொலைநோக்கு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அதில் மிக முக்கியமான திட்டமான “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை” நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையையும், பிரசவித்த தாயையும் கௌரவிக்கும் முகமாக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அரசின் சுகாதாரச் சேவைகளில் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தவும், தாய்மையின் மகிழ்ச்சியைக் கொண்டாடவும் வழிவகை செய்யும். அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த தாய்மார்களின் […]
திருச்செந்தூர் கோவிலில் தரிசன கட்டணத்தை உயர்த்தக்கூடாது; சற்குரு சீனிவாச சித்தர் எதிர்ப்பு
திருச்செந்தூர் கோவிலில் தரிசனம் மற்றும் அபிஷேகம் உள்ளிட்ட வழிபாடுகளுக்குரிய கட்டணங்களை பல மடங்கு உயர்த்துவதற்கு கோவில் நிர்வாகம் முன்வந்து அறிவித்துள்ளது. இது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு சித்தர் நகர் மஹாபிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தின் சுவாமிகள் ‘சற்குரு சீனிவாச சித்தர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. கடற்கரையோரம் அமைந்துள்ள இக்கோவிலுக்கு உள்ளூர், […]
கோவில்பட்டி நகரில் முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் ஒவ்வொரு நாளும் பெருகிக்கொண்டே வருகின்றன இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் உண்டாகி வருகின்றன. ரகரியின் முக்கிய சாலைகள் அனைத்தும் ஆக்கிரமிப்புகள் காரணமாகசுமார் 40 அடிக்கு மேல் சுருங்கி விட்டன. நகரின் அழகு பறி போய்விட்டது. இதனால் கோவில்பட்டியில் ஆக்கிரி அகற்றகோரி பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன. வரும் நாட்களில் போராட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கோவில்பட்டி நகராட்சி நிர்வாகம் நகரில் ஆக்கிரமிப்புகளை […]
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கோவில்பட்டியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்ததால், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தென்னக மானாவாரி விவசாயிகள் சங்கத் தலைவர் பிரேம்குமார் தலைமை […]
கோவில்பட்டியில் 20 அடியாக சுருங்கிய சாலைகள்: விபத்துகளை தடுக்க ஆக்கிரமிப்புகளை அகற்ற தமாகா
கோவில்பட்டி நகரப்பகுதியில் விபத்துகளை தடுக்க சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென தமாகா கோரிக்கை விடுத்துள்ளது. தமாகா வடக்கு மாவட்ட தலைவர் என்.பி.ராஜகோபால் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கி.வைரம், மாவட்ட துணை தலைவர்கள் பி.முத்துசாமி, கே.திருமுருகன், கோமதி சங்கர், மாவட்ட பொதுச் செயலாளர் வி.எஸ்.ஏ.சுப்புராஜ், வட்டார தலைவர்கள் கனிராஜ், முத்துப்பாண்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிமாறன், வட்டாரத் துணைத் தலைவர்கள் தங்கராஜ், சச்சின் உள்ளிட்டோர் கோவில்பட்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்துக்கு பழங்கள், பூ, வெற்றிலை […]
7 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக விண்ணப்பித்த 4மணி நேரத்தில் உறவுமுறை சான்று வழங்கி எட்டயபுரம் வட்டாட்சியர் சுபா துரித சேவை ஆற்றியுள்ளார் இது பற்றிய விவரம் வருமாறு:- எட்டயபுரம் வட்டத்திற்க்குட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்தவரின் 7 மாத கைக்குழந்தைக்கு கல்லீரல் பிரச்சனையின் காரணமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய சென்னையில் உள்ள மருத்துவமனையை அணுகி உள்ளனர் மருத்துவமனை நிர்வாகம் சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் இருந்து உறவுமுறை சான்று பெற்று வரும்படி வலியுறுத்தியதின் பேரில் […]







