7 மாத குழந்தைக்கு விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் உறவு முறை சான்று வழங்கிய தாசில்தாரின் துரித சேவை
7 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக விண்ணப்பித்த 4மணி நேரத்தில் உறவுமுறை சான்று வழங்கி எட்டயபுரம் வட்டாட்சியர் சுபா துரித சேவை ஆற்றியுள்ளார்
இது பற்றிய விவரம் வருமாறு:-
எட்டயபுரம் வட்டத்திற்க்குட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்தவரின் 7 மாத கைக்குழந்தைக்கு கல்லீரல் பிரச்சனையின் காரணமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய சென்னையில் உள்ள மருத்துவமனையை அணுகி உள்ளனர்

மருத்துவமனை நிர்வாகம் சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் இருந்து உறவுமுறை சான்று பெற்று வரும்படி வலியுறுத்தியதின் பேரில் அவர்கள் கோவில்பட்டியை சேர்ந்த கரு.ராஜசேகரன் என்பவரை சமூக வலைதள மூலம் தொடர்பு கொண்டு பேசினர்.
உடனே அவர் சமூக செயற்பாட்டாளர் கப்பிகுளம் பாபு விடம் இதுகுறித்து பேசியதும் எவ்வித மறுப்புமின்றி நானும் வருகிறேன் வட்டாட்சியரை வட்டாட்சியர் அலுவலகம் வந்துவிட்டார்
இருவரும் சேர்ந்து மனுதாரருடன் வட்டாட்சியரை அணுகி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக உறவுமுறை சான்று தேவைப்படுகிறது எனக் கூறினார்கள்.
எந்த தயக்கமும் இன்றி வட்டாட்சியர் இது போன்ற சான்றிதழை காலதாமதம் இல்லாமல் உடனே வழங்க வேண்டும் என்ற நோக்கில் சோழபுரம் குறுவட்ட வருவாய் ஆய்வாளரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக சான்று கிடைக்க சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் பேசி பரிந்துரை செய்யுமாறு கேட்டுக் கொண்டார் .

இதன் பெயரில் சோழபுரம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் T.சண்முகபுரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கும் சென்று விசாரணை அறிக்கை பெற்று மீண்டும் வட்டாட்சியரிடம் சமர்ப்பித்தார்கள்
எனினும் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலர் அனுமதி பெற்று வெளியில் சென்றி ருந்த நிலையில் வேறொரு பிரிவு அலுவலரை அழைத்து உறவுமுறை சான்று தட்டச்சு செய்து தர கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து மாலை அலுவலக நேரம் முடியும் முன்பாக விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் உறவுமுறை சான்று வழங்கப்பட்டது.
எட்டயபுரம் வட்டாட்சியர் சுபாவின் துரித சேவைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன







