கோவில்பட்டி கல்லூரியில் போக்குவரத்து விதிமுறைகள் வழிகாட்டுதல் நிகழ்ச்சி
Oplus_16908288


கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை வாங்கினார். கல்லூரி உறுப்பினர்கள் அருண், ராஜ்மோகன் மற்றும் கல்லூரி முதல்வர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் கற்குவேல் ராஜ் வரவேற்புரை வழங்கினார்.
கோவில்பட்டி போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் வெங்கடேஷ் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார். முன்னாள் போக்குவரத்து காவல் ஆய்வாளர் லட்சுமணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விதிகள், பொறுப்பான வாகன இயக்க விதிமுறை குறித்து பவர் பாயிண்ட் விளக்க உரை மூலமாக விதிகளை விளக்கி பேசினார். மாணவர்களுக்கான சமூகப் பொறுப்புணர்வுகள் குறித்து பயனுள்ள கருத்துக்களை வழங்கினார்.
தொடர்ந்து மாணவர்கள் சாலை விதிகள் குறித்து கேட்ட கேள்விகளுக்கு விளக்கமளித்தார்.

நிகழ்ச்சியில் ஆங்கிலத்துறை தலைவர் சபிதா சண்முகப்பிரியா பேராசியர்கள் ஜெய்சிங் ராஜ் கோகிலா,கனக பிரபா, திவ்யா உள்பட முதலாமாண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் பேராசிரியர் பிரேமலதா நன்றி கூறினார்.







