கனமழை : தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை; ஆட்சியர் அறிவிப்பு
தூத்துக்குடியில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. தூத்துக்குடி மாநகர பகுதிகளில் ஆங்காங்கே தேங்கி கிடந்த தண்ணீரை மாநகராட்சி நிர்வாகம் லாரிகள் மூலம் உறிஞ்சி அகற்றினர். இந்நிலையில், சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
தூத்தக்குடி மாவட்டத்தில் மேலும் பல்வேறு ஊர்களில் மழை பெய்தது. மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் முக்கிய ஊர்களில் பெய்த மாலை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
தூத்துக்குடி- 31
காயல்பட்டினம்- 15
குலசேகரன்பட்டினம்- 12
கோவில்பட்டி- 2
கழுகுமலை- 24
கயத்தார்- 15
கடம்பூர்- 53
கீழ ஈரால்- 2
பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை எதிரொலியாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதற்கும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.
கோவில்பட்டியில் இந்த உத்தரவு வந்து சேருவதற்கு முன்பாக சில பள்ளிக்கூட பஸ்கள் மாணவர்களை அழைத்து வர சென்று விட்டன. பின்னர் டிரைவர்களுக்கு தகவல் தெரிவிக்கபட்டு பஸ்கள் திரும்பவும் பள்ளிக்கூடம் சென்றன.
வாட்சப் மூலம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் அவர்கள் வீட்டிலேயே இருந்து விட்டனர்.
மழையினால் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தாலும் இன்று மதியம் வரை மழை பெய்யவில்லை. ஆனால் வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது.







