கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் கடலைமிட்டாய் விற்பனை நிலையம்
ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் அந்தந்த ஊர்களை சார்ந்த பாரம்பரியமிக்க உணவு பண்டங்கள் விற்பனை செய்வதற்காக ரெயில்வே நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி கோவில்பட்டி ரெயில் நிலையத்தின் சார்பில், புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் விற்பனை நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விற்பனை நிலையத்தை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தூத்துக்குடி மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். கோவில்பட்டி கொண்டல்சாமி, விருதுநகர் வணிக ஆய்வாளர் கோவிந்தராஜ், கோவில்பட்டி ரெயில் நிலைய அதிகாரி மகாராஜ்சிங் மீனா, ரெயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் சந்திரன் ,கோவில்பட்ட்டி கடலைமிட்டாய் உற்பத்தியாளர்கள மற்றும் விற்பனையாளர்கள் நலசங்க தலைவர் கார்த்தீச்வரன், கண்ணன், ஏ.கே.ஆர்.கடலைமிட்டாய் உரிமையாளர்கள் மாரிச்சாமி, மணி சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ரெயில் பயணிகள் பலர் மிகுத்த ஆர்வமுடன் கடலைமிட்டாய் வாங்கி சென்றனர்,







