• November 17, 2026

கோவில்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம்; பக்தர்களுக்கு ராகவேந்திரா அறக்கட்டளை அன்னதானம்

 கோவில்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம்; பக்தர்களுக்கு ராகவேந்திரா அறக்கட்டளை அன்னதானம்

Oplus_16908288

கோவில்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வள்ளி, தேவசேனா சமேத  முத்துக்குமார சுவாமியின் திருக்கல்யாண வைபவம் பக்திப் பெருக்குடனும், மங்கள வாத்தியங்கள் முழங்கவும், அதிவிமரிசையாக நடைபெற்றது.

இதையொட்டி நேற்று காலை 9 மணிக்கு மேல் 10:20 மணிக்குள் மூலவர் மற்றும் உற்சவர் திருமேனிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது,

மாலை 5:20 மணிக்கு மேல் பத்ரகாளி அம்மன் தகோவிலில் இருந்து திருக்கல்யாண சீர்வரிசை கொண்டு வருதல் நடைபெறும். பக்தர்கள் ஊர்வலமாக சீர்வரிசை பொருட்களை கொண்டு வந்தனர்.

அதனைத் தொடர்ந்து, மீனாட்சியம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது,

இத்திருமண வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து இறையருள் பெற்றனர்.

முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணத்தை முன்னிட்டு ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பாக கோவில் வளாகத்தில் பகிதர்களுக்கு  அன்னதானம் வழங்கப்பட்டது,

 இந்நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன் தலைமை தாங்கினார்,.. பொருளாளர் கார்த்திகேயன் மிலிட்டரி சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.. அறக்கட்டளை தலைவர் ஜெயக்கொடி பொங்கல் பிரசாதம் வழங்கினார்.. அன்னதானத்தை கோவில்பட்டி (பிள்ளையார் நத்தம்) விஏஓ மந்திர சூடாமணி துவக்கி வைத்தார்..

இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.. அன்னதான ஏற்பாடுகளை  பாலமுருகன் ஸ்டோர்  பாலமுருகன் ,தேவி பிரேம் சண்முகசுந்தரம் ஆகியோர் செய்திருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *