இந்திய கலாச்சார நட்புறவு கழகம் தூத்துக்குடி மாவட்ட நிர்வாக குழு கூட்டம்
இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாக குழு கூட்டம் கோவில்பட்டி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் அபிராமி பி. முருகன் தலைமை தாங்கினார்., நகரச் செயலாளர் நம். சீனிவாசன் முன்னிலை வகித்தார்.
மாநில குழு முடிவுகளை மாநிலச் செயலாளர் க. தமிழரசன் விளக்கி பேசினார். கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஆம்ஸ்ட்ராங், ஜெயா ஜனார்த்தனன், முருக சரஸ்வதி, ராமலக்ஷ்மி, நாஞ்சில் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இந்திய கலாச்சார நட்புறவு கழகம் துவக்கப்பட்ட 85 வது ஆண்டு அமைப்பு தின விழாவை கோவில்பட்டியில் கலை நிகழ்ச்சியுடன் வருகிற 29.11. 26 அன்று நடத்துவது, தமிழ்நாடு அமைச்சர், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர், நகர்மன்ற தலைவர் மேலும் முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை அழைப்பது என தீர்மானிக்கப்பட்டது.
உலகம் முழுவதும் பரவி வரும் போர்வெறிக்கு எதிராக கல்லூரி மாணவர்களிடம் துண்டு பிரசுரம் விநியோகிப்பது., மணிப்பூர் கலவரத்திற்கு காரணமான தீர்ப்பை அளித்த நீதிபதி எம் பி முரளிதரனை தமிழ்நாடு பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மாநில ஆணையத்தின் தலைவராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.







