• November 16, 2026

கடந்த ஆட்சியில் போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான 600 வழக்குகள் ரத்து

 கடந்த ஆட்சியில் போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான 600 வழக்குகள் ரத்து

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க கடந்த ஆட்சிக் காலத்தில், மே 2021 முதல் ஏப்ரல் 2026 வரை விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடியதால் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்ப பெற்று ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் 02.09.2026 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில், பேரவை விதி 110-ன் கீழ் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடிய போது அவர்கள் மீது கடந்த ஆட்சிக் காலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்படும் என அறிவித்தார்கள்.

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க, மே 2021 முதல் ஏப்ரல் 2026 வரை விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது போடப்பட்ட 600 வழக்குகள் கண்டறிப்பட்டன. அவற்றைத் திரும்ப பெற உரிய சட்ட விதிகளின்படி ஆய்வு செய்து இவ்வழக்குகளில் பதிவு செய்யப்பட்ட சுமார் 92,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் அவ்வழக்குகளில் இருந்து விடுவித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *