• November 16, 2026

திருச்செந்தூரில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி  பக்தர்களின் 8 பவுன் தங்க நகை, 15 செல்போன்கள் திருட்டு

 திருச்செந்தூரில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி  பக்தர்களின் 8 பவுன் தங்க நகை, 15 செல்போன்கள் திருட்டு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில்.கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைந்த நிலையில், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் பக்தர்களிடம் கைவரிசை காட்டியுள்ளனர்.

இதில் சுமார் 8 பவுன் தங்க நகைகள் மற்றும் 15 செல்போன்கள் திருடப்பட்டுள்ளதாகக் கோவில் காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. திருடப்பட்ட நகை மற்றும் செல்போன்களின் மொத்த மதிப்பு ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

கந்தசஷ்டி விழாவை முன்னிட்டுத் திருச்செந்தூரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

 இவ்வளவு பெரிய அளவிலான போலீஸ் பாதுகாப்பு இருந்தபோதிலும், திருட்டுச் சம்பவங்கள் அரங்கேறியிருப்பது பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்த திருவிழா காலத்தில் நடைபெற்ற இத்திருட்டுச் சம்பவங்கள் குறித்துக் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தீவிர விசாரணை நடத்தி, குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து நகை மற்றும் செல்போன்களை மீட்டுத் தர வேண்டும் எனப் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *