• November 16, 2026

அதிமுக நிர்வாகி பீர் பாட்டிலால் குத்திக் கொலை

 அதிமுக நிர்வாகி பீர் பாட்டிலால் குத்திக் கொலை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாக்கனி (எ) கனி ராஜா. அதிமுக நிர்வாகியான இவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த வீரசிங்கம் என்ற இளைஞருக்கும் கடந்த மாதம் நடைபெற்ற கோவில் திருவிழாவின்போது தகராறு ஏற்பட்டு முன்விரோதம்  இருந்துள்ளது.

இந்த நிலையில் ராஜாக்கனியிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி வீரசிங்கம் தனது நண்பரான மாரீஸ்வரனுடன் ராஜாக்கனியையும் மது அருந்துவதற்காக இருசக்கர வாகனத்தில் பக்கத்து கிராமமான நாகலாபுரம் சாலையில் உள்ள கல்யாண மண்டபம் அருகே நெல் களத்திற்கு அழைத்து சென்றார்.

இவரது நண்பர்கள் சிலருக்கும் அவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதையடுத்து, மது அருந்தும்போது இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.

தகராறு முற்றிய நிலையில், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ராஜாக்கனி அங்கிருந்து தப்பி ஓடினார்.. எனினும், அவரை விரட்டிச் சென்ற கும்பல், பீர் பாட்டிலை உடைத்து ராஜாக்கனியின் கழுத்தில் சரமாரியாக குத்திவிட்டுத் தப்பியோடியது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்த ராஜாக்கனியை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜாக்கனி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், கொலையில் தொடர்புடைய வீரசிங்கம், மாரீஸ்வரன், விக்னேஸ்வரன், முத்துக்கருப்பன், சதீஷ்குமார் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *