பெண்களுக்கு இலவசமாக 5 வெள்ளாடுகள் வழங்கும் திட்டம்; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
Oplus_16908288
தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்களுக்கு இலவசமாக 5 வெள்ளாடுகள், கறவைப் பசு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
கோவில்பட்டி, கயத்தாறு, ஒட்டப்பிடாரம், புதூர், விளாத்திகுளம் ஆகிய
5 ஒன்றியங்களில் இத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ரூ.30,000 மதிப்புள்ள
5 வெள்ளாடுகள் இலவசமாக வழங்கப்படும்.
·
ஊரகப் பகுதிகளில் வசிக்கும்
18 முதல் 60 வயதுவரை பெண்கள் ஆதரவற்ற விதவைகள்
கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் முதிர்கன்னிகள்
திருநங்கைகள்
நிலமற்ற கூலித் தொழிலாளர்கள் மாற்றுத்திறனாளிகள்
மேற்கண்ட பிரிவினருக்கு
முன்னுரிமை அளிக்கப்படும்.

கறவைப் பசு வழங்கும் திட்டம்
ஒட்டப்பிடாரம் ஒன்றியத்தில் மட்டும் செயல்படுத்தப்படும்.
ரூ.50,000 மதிப்புள்ள
ஒரு கறவைப் பசு இலவசமாக வழங்கப்படும். அதிகபட்சம் 25 ஏக்கர் வரை சொந்த நிலம் வைத்திருக்கலரம்.
தேவையான ஆவணங்கள்
ஆதார் அட்டை,
குடும்ப அட்டை
,சாதிச் சான்றிதழ்
மாற்றுத்திறனாளி சான்றிதழ் (பொருந்துவோருக்கு)
கால்நடை பராமரிப்புத் துறையின் பிரத்தியேக இணையதளம் மூலம் இ-சேவை மையங்கள் (e-Sevai) மூலம் ஊராட்சி ஒன்றிய கால்நடை நிலையங்களில் உள்ள
பல்நோக்கு பணியாளர்கள் மூலம்.
விண்ணப்பிக்கும் காலம்
16.11.2026 முதல் 5.12.2026 வரை.
மேலும் விவரங்களுக்கு, அருகிலுள்ள கால்நடை மருந்தகத்தில் உள்ள கால்நடை உதவி மருத்துவரை தொடர்புகொள்ளலாம்







