• November 14, 2026

தங்கம் விலை சரிவு தொடரும் வாய்ப்பு

 தங்கம் விலை சரிவு தொடரும் வாய்ப்பு

இந்தியாவில்  சில மாதங்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்திய புல்லியன் மற்றும் நகை விற்பனையாளர்கள் சங்கத்தின் கணக்குப்படி, 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு ஆகஸ்டு 31-ந்தேதி ரூ.1,54,280 ஆக இருந்தது. செப்டம்பர் 3-ந்தேதி ரூ.1,55,801 என்ற புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிறகு படிப்படியாக விலை குறையத் தொடங்கியது.

அக்டோபர் 11-ந்தேதி 10 கிராம் தங்கம் ரூ.1,51,480 ஆகவும், நவம்பர் 5-ந்தேதி ரூ.1,44,506 ஆகவும் இருந்தது. நவம்பர் 10-ந்தேதி ரூ.1,42,420 ஆக குறைந்த நிலையில், நவம்பர் 11-ந்தேதி மாலை ரூ.1,40,603 ஆக சரிந்தது. அதாவது செப்டம்பர் தொடக்கத்தில் இருந்த உச்ச விலையுடன் ஒப்பிடும்போது தற்போது ரூ.15,198 குறைந்துள்ளது.

சென்னையில் நேற்று 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு சுமார் ரூ.1,39,800 ஆகவும், 22 காரட் தங்கம் ரூ.1,28,150 ஆகவும் இருந்தது. இந்திய சந்தையில் தங்கத்தின் எதிர்கால விலை 10 கிராமுக்கு ரூ.1,39,000 அளவில் இருந்தது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நேற்று 1.4 சதவீதம் வரை சரிந்து, ஒரு அவுன்ஸ் 3,931.54 டாலராக குறைந்தது.

அமெரிக்காவில் அக்டோபர் மாத நுகர்வோர் விலை பணவீக்கம் 0.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது சந்தை எதிர்பார்ப்பான 0.3 சதவீதத்தைவிட அதிகம்.

இவ்வாறு எதிர்பார்த்ததைவிட பணவீக்கம் அதிகரித்ததால், அமெரிக்க மத்திய வங்கி அடுத்த மாதம் (டிசம்பர்) 0.25 சதவீதம் வட்டி விகிதத்தை உயர்த்தும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

வட்டி விகிதம் உயரும்போது வட்டி வருவாய் தராத தங்கத்தில் முதலீடு செய்வதற்கான ஆர்வம் குறையும். மேலும், அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வதும் தங்கத்தின் விலையில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

இந்த வட்டிவிகித உயர்வு எதிர்பார்ப்பு அதிகரித்ததே தங்கம் விலை சரிவுக்கு முக்கிய காரணம் என வர்த்தக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

வரும் நாட்களில் தங்கம் விலையை பொறுத்தவரை, குறுகிய காலத்தில் சரிவு தொடரும் வாய்ப்பு இருப்பதாக சந்தை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். குறிப்பாக அமெரிக்க பணவீக்கம், டிசம்பர் மாத வட்டி விகித முடிவு, டாலர் மதிப்பு ஆகியவை தங்கத்தின் அடுத்தகட்ட விலையை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக உள்ளன.

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தினால் தங்கத்தின் மீது மேலும் அழுத்தம் ஏற்படலாம். அதேநேரம், வட்டி உயர்வு எதிர்பார்ப்பு குறைந்தாலோ, உலகளாவிய பொருளாதார அல்லது புவிசார் பதற்றங்கள் அதிகரித்தாலோ தங்கம் மீண்டும் விலை உயர வாய்ப்பும் உள்ளது.

இந்தியாவில் ஆபரண தங்கத்தின் விலை  நேற்று கிராமுக்கு ரூ.200 குறைந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 815 ஆகவும், சவரனுக்கு ரூ.1,600 குறைந்து, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 520 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.200-க்கும், கிலோ ரூ.2 லட்சத்துக்கும் விற்பனையானது. இது மாற்றம் இன்றி நேற்றும் தொடர்ந்தது.

இந்நிலையில் தொடர்ந்து 4-வது நாளாக இன்றும்தங்கம் விலை  சரிந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,695-க்கும், சவரனுக்கு ரூ.960 குறைந்து ஒரு சவரன் ரூ.1,01,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 4,480 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.195-க்கும், ஒரு கிலோ ரூ.1,95,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வரும் நாட்களில் தங்கம் விலையை பொறுத்தவரை, குறுகிய காலத்தில் சரிவு தொடரும் வாய்ப்பு இருப்பதாக சந்தை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். குறிப்பாக அமெரிக்க பணவீக்கம், டிசம்பர் மாத வட்டி விகித முடிவு, டாலர் மதிப்பு ஆகியவை தங்கத்தின் அடுத்தகட்ட விலையை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக உள்ளன.

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தினால் தங்கத்தின் மீது மேலும் அழுத்தம் ஏற்படலாம். அதேநேரம், வட்டி உயர்வு எதிர்பார்ப்பு குறைந்தாலோ, உலகளாவிய பொருளாதார அல்லது புவிசார் பதற்றங்கள் அதிகரித்தாலோ தங்கம் மீண்டும் விலை உயர வாய்ப்பும் உள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *