உளுந்து விதை, இடுபொருள்கள் 50 சதவீத மானியத்தில் விநியோகம்
கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் வட்டார விவசாயிகளுக்கு உளுந்து விதை மற்றும் இடுபொருள்கள் 50 சதவீத மானியத்தில் விநியோ கம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து கோவில்பட்டி வேளாண்மை உதவி இயக்குநர் மணிகண்டன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் கோவில்பட்டி மற்றும் ஓட்டப்பிடாரம் வட்டாரங்களில் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக உயர்தர உளுந்து விதைகள் மற்றும் இடுபொருள்கள் 50 சதவீத மானிய விலையில் வழங் கப்படுகிறது.
இத்திட்டத்தின்கீழ் ஒரு கிலோ வம்பன் 11 (விபிஎன் 11) உளுந்து விதை 50 சதவீத மானியத்தில் ரூ.65-க்கு வழங்கப் படுகிறது. இதன் சராசரி மகசூல் ஹெக்டேருக்கு 899 கிலோ ஆகும். இது முந்தைய பிரபல ரகங்களான விபிஎன் 6-ஐ விட 14.8 சதவீதம் அதிகமாகவும், விபிஎன் 8-ஐ விட 11.8 சதவீதம் அதிகமாக வும் கூடுதல் மகசூல் தரக்கூடியது.
தமிழகத்தில் கார்த்திகை, ராஃபி, கோடை ஆகிய மூன்று பருவங்களிலும் இதனைப் பயிரிடலாம். இது 70 முதல் 75 நாள்களில் அறுவடைக்கு வரக்கூடிய நடுத்தரகால பயிராகும். செடியில்உள்ள அனைத்து காய்களும் ஒரே சமயத்தில் முதிர்ச்சி அடையும் தன்மை கொண்ட தால் அறுவடை செய்வது மிகவும் எளிது.
இந்த ரகம் பல்வேறு நோய் மற்றும் பூச்சி எதிர்ப்பு சக்திகளை கொண்டுள் ளது. விதையுடன் உயிர் உரங்கள், பயறு நுண்ணூட்ட உரம் ஆகியனவும் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் ஆதார் அட்டை, பட்டா நகல் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். பணம் இல்லா பரிவர்த்தனை மற்றும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்காக யுபிஐ செயலி வழியாக மட்டுமே பணத்தை செலுத்த முடியும்.

கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள் மானிய விலையில் விதைகள் மற்றும் உரங்களை பெற்று பயனடையலாம்.
இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது,







