• October 22, 2026

கோவில்பட்டியில் இலவச செயற்கை கால் மற்றும் கை வழங்குவதற்கான அளவீட்டு முகாம் செப்டம்பர் 6-ம் தேதி நடக்கிறது 

 கோவில்பட்டியில் இலவச செயற்கை கால் மற்றும்  கை வழங்குவதற்கான அளவீட்டு முகாம் செப்டம்பர் 6-ம் தேதி நடக்கிறது 

Oplus_16908288

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி நிறுவனர்  கே.ராமசாமி பிறந்த நாளை முன்னிட்டு,  கல்லூரி மற்றும் சென்னை பிரீடம் அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்தும் இலவச செயற்கை கால் மற்றும் செயற்கை கை வழங்குவதற்கான அளவீட்டு முகாம்,  செப்டம்பர்  6-ந் தேதி காலை 9 மணி முதல் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் செயற்கைக் கை, செயற்கைக் கால், சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், வாக்கர், ரோலேட்டர், சிறப்பு குழந்தைகளுக்கான இருக்கை, நடைபயிற்சி மற்றும் நிற்கும் உபகரணங்கள், ஆர்த்தோசிஸ்  உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு மறுவாழ்வு மற்றும் உடல் இயக்க உதவி சாதனங்களை இலவசமாக வழங்குவதற்கான அளவீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

விருப்பமும் தகுதியும் உடைய மாற்றுத்திறனாளிகள் தங்களது பெயர்களை 9843328155, 9543343502, 9444885083, 9344803795 ஆகிய மொபைல் எண்களில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இம்முகாமில் பங்கேற்க விரும்பும் நபர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, யுடிஐடி அட்டை மற்றும் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை ஆகிய ஆவணங்களை அவசியம் கொண்டு வர வேண்டும் என்று கல்லூரி இயக்குநர்  எஸ்.சண்முகவேல் தெரிவித்துள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *