கோவில்பட்டி மலையடிபட்டி நிச்சோப நதி ஆற்றுப்படுகையில் அகழாய்வு பணிகள் கள ஆய்வு
Oplus_16908288


தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் கோவில்பட்டி அருகே கலிங்கப்பட்டி பகுதியில் உள்ள காரிசாத்தான் மலை அருகில் மலையடிபட்டி நிச்சோப நதி ஆற்றுப்படுகையில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழரின் தொன்மையான நாகரீக வாழ்க்கை பற்றி பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு வரலாற்று ஆய்வாளரும் முன்னாள் ஆசிரியருமான ஸ்டீபன் அப்பாதுரை, கோவில்பட்டி நாட்டு நலப்பணி முன்னாள் திட்ட அலுவலர் சுப்பா ராஜூ ஆகியோர் கள ஆய்வு பணியை பார்வையிட்டனர்.

இது பற்றி கலிங்கப்பட்டி, திருவேங்கடம், பெருங்கோட்டூர் பகுதி பள்ளி மாணவர்களிடமும் பொதுமக்களிடமும் எடுத்துக் கூறி வருகின்றனர்.
அகழாய்வில் 80க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டு கரிம பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. செங்கல் கட்டமைப்பு கொண்ட உறை கிணறு, முதுமக்கள் தாழி ,மண் பாண்டங்கள், இரும்பு ,தங்க, வெண்கல பொருட்கள் பவளமணி பாசிகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. நிச்சோப நதி புராண, வரலாற்று சிறப்புடைய நதியாக விளங்கி வருகிறது. அப்பகுதியில் அந்த நதியின் குறுக்கே 100 மீட்டர் நீளம் 4 மீட்டர் அகலத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்பே சுட்ட செங்கல், சுண்ணாம்பு, கடுக்காய் பொடி, கருப்பட்டி பாகு கலந்து பிரமாண்டமான தடுப்பணை கட்டப்பட்டிருந்தது. காட்டாற்று பெருவெள்ளத்தில் சற்று சிதைவடைந்து உள்ளது என்பதை நேரில் காண முடிந்தது.

அதன் பிறகு அந்த அளவு பெருவெள்ளம் இதுவரை வந்ததில்லை எனவே தடுப்பணை சுவர் பெரும் சேதம் ஏற்படாமல் உள்ளது. இவற்றை நேரில் கண்டு புகைப்பட சான்றுகளுடன் கள ஆய்வுய்வு பணியை நிறைவு செய்தோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்







