பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் பிரசார இயக்கம்
Oplus_16908288
கோவில்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரசார இயக்கம் நடத்தப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர் செந்தில் ஆறுமுகம், தாலுகா செயலாளர் பாபு ஆகியோர் தலைமை தாங்கினர். நகர உதவிச் செயலாளர் அலாவுதீன், தாலுகா உதவி செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில உதவி செயலாளர் பெரியசாமி, மாவட்ட செயலாளர் கரும்பன் ஆகியோர் பிரசார இயக்கத்தை தொடங்கி வைத்தனர்
ஏ.கே.எஸ். திரையரங்கு சாலையில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு தொடங்கிய பிரசார இயக்கம் பிரதான சாலை வழியாக சென்றது. வழி நெடுக பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. பிரசார இயக்கம் பயணியர் விடுதி முன்பு நிறைவடைந்தது. அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
பிரசார இயக்கத்தினர் வலியுறுத்திய கோரிக்கைகள் விவரம் வருமாறு,:-
*விவசாயிகள் உரிமை பெற வேண்டும். வெறுப்பு அரசியலை வேரறுக்க வேண்டும்.
*பெட்ரோல், டீசல், கேஸ் விலையை உயர்வை திரும்ப பெற வேண்டும்.
*இளையரசனேந்தல் ரெயில்வே சுரங்கப்பாதையின் இருபுறமும் அணுகுசாலை பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

*மந்தித்தோப்பு சாலையை போர்க்கால அடிப்படையில் செப்பனிட வேண்டும். கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் வீடு கட்டி குடியிருந்து வரும் மக்களுக்கு நிபந்தனையின்றி வீட்டு தீர்வை வழங்க வேண்டும்.
*சீவலப்பேரி குடிநீர் தினமும் விநியோகிக்க வேண்டும்.
*மேற்கண்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
பிரசார இயக்கத்தில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சேதுராமலிங்கம், நகர பொருளாளர் சீனிவாசன், நகர நிர்வாகக்குழு உறுப்பினர் முனியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.







