விளையாட்டில் ஏற்படும் காயங்களுக்கு சரியான சிகிச்சை என்ன? கோவில்பட்டியில் உங்கள் கேள்விகளுக்கு முன்னணி டாக்டர்கள் பதில் அளிக்கிறார்கள்
Oplus_16908288
விளையாட்டில் ஏற்படும் காயங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவில்பட்டி நேஷனல் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடக்கிறது.

பிரபல விளையாட்டு மருத்துவ பேச்சாளர், பிசியோதெரபிஸ்ட், ஊட்டச்சத்து நிபுணர் ஆகியோர் உரையாற்றுவார்கள்.
விளையாட்டில் ஏற்படும் முழங்கால், தோள்பட்டை, கணுக்கால் மற்றும் தசைநார் காயங்களை எவ்வாறு தவிர்ப்பது?
காயம் ஏற்பட்டால் சரியான சிகிச்சை என்ன?
என்பது பற்றிய நேரடி கேள்வி – பதில் சிறப்பு அமர்வு நடைபெற உள்ளது.
நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பிரபல டாக்டர்கள் பதில் அளிக்கிறார்கள்.
சிறப்பு டாக்டர்கள் எஸ். ஆர். சுந்தரராஜன்,
ராஜீவ் ராமன், எஸ். மாரிமுத்து எஸ்.மகேஷ்ராம்
ஏ.சுரேஷ் குமார், எஸ்.தினேஷ்
, என்.மணிகண்டன், ஜெ.நிர்மல்ராஜா, எஸ். தாமோதரன்
ஆகியோர் இந்த அமர்வில் கலந்து கொள்கிறார்கள்.

இந்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள்
கலந்து கொண்டு பயன்பெறலாம். எந்த கட்டணமும் கிடையாது என்று டாக்டர் எஸ். தாமோதரன் கூறியுள்ளார்







