கோவில்பட்டியில் அகில இந்திய ஆக்கி: மும்பை அணி ‘சாம்பியன்’

கோவில்பட்டிகிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஆக்கி மைதானத்தில் அகில இந்திய அளவிலான ஆக்கிப்போட்டி கடந்த 21 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.
இந்திய அளவில் புகழ்பெற்ற 16 அணிகள் போட்டியில் பங்கேற்றன. இறுதிப்போட்டி நேற்று மாலை நடை பெற்றது.

இறுதிப் போட் டியில் மும்பை இந்திய கப்பற்படை அணியும், செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரயில்வே அணியும் மோதின. இதில், இரு அணிகளும் 1: 1 என்ற கோல் கணக் கில் சமன் பெற்ற நிலை யில் சூட் அவுட் முறை கடை பிடிக்கப்பட்டது.
மும்பை இந்திய கப்பற்படை அணி வெற்றி பெற்று சாம்பியன் பட் டத்தை தட்டிச் சென்றது. தொடர்ந்து நடந்த பரிச ளிப்பு விழாவில் முதலி டம் பிடித்த மும்பை இந்திய கப்பற்படை அணிக்கு ரூ. 2 லட்சம், 2வது இடத்தை பிடித்த செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரயில்வே அணிக்கு ரூ.1 லட்சம், 3ம் இடத்தை பிடித்த ஜலந்தர் ஆர்மி கிரீன் அணிக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசும், லட்சுமி அம்மாள் நினைவு கோப்பை வழங் கப்பட்டது.
4வது இடம் பிடித்த பெங்களூரு சதர்ன் கமெண்ட் அணி க்கு கோப்பை வழங்கப் பட்டது.

சிறப்பு விருந்தி னர்களாக இந்திய ஆக்கி அணியின் முன்னாள் விளையாட்டு வீரர் மற் றும் அர்ஜுனா விருது பெற்ற என்.முகமது ரியாஸ், பெங்களூரு எம்.இ.ஜி. அணியின் முன்னாள் தலைவர் சாம் சங் பர்னாண்டஸ் ஆகி யோர் வெற்றி பெற்ற அணிகளுக்கான ரொக் கப் பரிசு மற்றும் கோப் பைகளை வழங்கி பாராட் டினர்.
நடுவர்களால் தேர்வு செய்யப்பட்ட சிறந்த கோல்கீப்பர், தற் காப்பு மற்றும் நடுகள ஆட்டக்காரர்கள், முன்வரிசை வீரர், வளர்ந்து வரும் வீரர், மற்றும் போட்டியின் சிறந்த வீரர் ஆகியோருக்கு சிறப்பு பரிசும் நினைவு கோப் பையும் வழங்கப்பட்டது.







