கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் முதல் முறையாக திமுக வெற்றி; நகராட்சி தலைவராக இருக்கும் கருணாநிதி எம்எல்ஏ ஆனார்
Oplus_16908288
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ள கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி இதுவரை திமுக வெல்லாத தொகுதி ஆக இருந்தது. திமுக கூட்டணிகள் இடம் பெற்றிருந்த இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் ஆர்சிஎஸ் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் முதல் முறையாக திமுக வேட்பாளர் நிறுத்தப்பட்டார்.

கோவில்பட்டி நகராட்சி தலைவராகவும், நகர திமுக செயலாளர் ஆகவும் இருக்கும் கா கருணாநிதி களம் கண்டார்.
தொடர்ந்து மூன்று முறை கோவில்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கடம்பூர் ராஜு, இந்த தடவை நான்காவது முறையாக போட்டியிட்டார்.
வெறும் தமிழக வெற்றி கழகம் சார்பில் பாலசுப்ரமணியன் , நாம் தமிழர் கட்சி சார்பில் வக்கீல் பாண்டி உள்பட 21 பேர் கோவில்பட்டி தொகுதியில் பலபரீட்சை நடத்தினர். களத்தில் 21 பேர் இருந்தாலும் திமுக அதிமுக தவெக மற்றும் நாதகா ஆகிய நான்கு கட்சிகளின் வேட்பாளர்கள் இடையே தான் போட்டி காணப்பட்டது.
தூத்துக்குடி வ உ சி பொறியியல் கல்லூரி மையத்தில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் முதல் இரண்டு சுற்றுகள் தமிழக வெற்றி கழக வேட்பாளர் பக்கம் இருந்தது. அக்கட்சி வேட்பாளர் முன்னணியில் இருந்தார்.
மூன்றாவது சுற்றில் நிலைமை மாறி திமுக வேட்பாளர் கருணாநிதி முன்னிலை பெற்றார். அதன்பிறகு தொடர்ந்து அவர் முன்னிலையில் காணப்பட்டார். இரண்டாவது, மூன்றாவது இடத்திற்கு தவெகா வும் அதிமுகவும் மாறி மாறி வந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கை முடிவில் தமிழக வெற்றி கழகம் இரண்டாம் இடத்திற்கு வந்தது. அதிக ஓட்டுகள் பெற்று முன்னிலையில் இருந்த திமுக வேட்பாளர் கருணாநிதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். 843 வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதி வெற்றி பெற்றார். ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-

1.கா. கருணாநிதி (திமுக) -61 643
2.பாலசுப்பிரமணியன் (தவெகா)–60 800
3.கடம்பூர் ராஜு (அ தி மு க) -53014
4.பாண்டி (நாம் தமிழர்) -11 919
5.ஆதி குமார் குடும்பர் (சுயேச்சை ) 29 92
6.எஸ் கண்ணன் (அகில இந்திய புரட்சித்தலைவர் முன்னேற்ற கழகம்) – 446
7.பவுன் துரை (சுயேச்சை)-398
8.பிரேம்குமார்(சுயேச்சை)-
9.பாண்டி முனீஸ்வரி(சுயேச்சை)- 367
10.எஸ் சரவணன் (தமிழ் பேரரசு கட்சி) 356
11.பரமசிவன் ( சுயேச்சை) 275
12.ஆர் ராமச்சந்திரன் (பகுஜன் சமாஜ்) 194
13.சி சேகர் (சுயேச்சை)-177
14.ஹரி பாலகிருஷ்ணன் (புதிய மக்கள் தமிழ் தேசம்)139
15.கே குருசாமி(சுயேச்சை)104
16.சின்ன மகாராஜா(சுயேச்சை)94
17.எஸ். ரெங்கநாயகலு (சுயேச்சை)90
18.எம்.பொன்னுசாமி(சுயேச்சை)77
19.ஆர் முனீஸ்வரன் (சுயேச்சை)69
20.பி.குணசேகரன்(சுயேச்சை)55
21.ஆறுமுகவேல் (நாம் இந்தியர் கட்சி)-52
நோட்டா-593







