கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா;கொடியேற்றத்துடன் தொடக்கம்

கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்துக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஆண்டு தோறும் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருவிழா இன்று ( மே 4 ) கொடியேற்றத்துடன் தொடங்கியது,
காலை 6 மணிக்கு நாடார் உறவின்முறைச் சங்கத்தலைவர் ஆர். எஸ். ரமேஷ் கோவில் தர்மகர்த்தா மாரியப்பன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், மண்டகப்படியாளர்கள், பொதுமக்கள், பெரியோர்கள், மஞ்சள் நீராட்டு இளைஞர்கள் புடைசூழ மங்களப்பொருட்களுடன் திருக்கோவிலுக்கு ஊர்வலமாக வருகை தந்தனர்,.

அதை தொடர்ந்து கொடியேற்று விழா நடைபெற்றது, காலை 6 மணிக்கு மேல் 7.29 மணிக்குள் கோவில் தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டதுதொடர்ந்து பூஜைகள் நடைபெற்றன,
கொடியேற்றம் முடிந்ததும் பெண் பக்தர்கள் பலர் குடங்களில் தண்ணீர் சுமந்து வந்து கொடிமரத்துக்கு ஊற்றி வழிபட்டனர்,
பின்னர் மாலை மணி 3 மணிக்கு நடை திறக்கப்படும்.மாலை 4 மணிக்கு பூஜை நடக்கும். மாலை மணி 6 மணிக்கு கோவில் முன்புறம் உள்ள .பொன்னம்பல நாடார் கலையரங்கத்தில் இரவு 7 மணிக்கு பக்தி நிகழ்ச்சி ஆரம்பமாகும். இரவு 7.25 மணிக்கு அம்மன் திருவீதி உலாவிற்கு எழுந்தருளல் இரவு 8.மணிக்கு அடைக்கலம் காத்தான் மண்டபத்தில் மண்டகப்படிதாரர் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இரவு 10 மணிக்கு அம்மன் திருவீதி உலா முடித்து கோவிலுக்கு திரும்பி வருதல், பைரவர் பூஜை நடைபெறும். மண்டகப்படிதாரர்கள் நிகழ்ச்சிகள் அடைக்கலம் காத்தான் மண்டபத்தில் நடைபெறும்.
முதல் நாளான இன்று இரவு 7 மணிக்கு வெள்ளி சிம்மவாகனத்தில் வெள்ளிக்குடையின் கீழ் அம்மன் “துர்க்கை” கோலத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும்.

இரவு 7.25 மணிக்கு திருக்கோவில் கலையரங்கத்தில் “.தேவி”யின் பக்தி சொற்பொழிவு நடைபெறும். மண்டகப்படிதாரர் – நாடார் தேங்காய், பழம், காய்கறி வியாபாரிகள் மண்டகப்படியார்.
தொடர்ந்து 15-ந் தேதி வரை திருவிழா நடைபெறும்., பத்திரகாளியம்மன் கோவில் விழாக்காலத்தில் தினமும் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படும். காலை 9 மணிக்கு :காலை பூஜை ,நண்பகல் 12 மணி, :உச்சிகால பூஜை நடைபெற்று,நண்பகல் 12.05 மணிக்கு நடை சாத்தப்படும்.







