தமிழக சட்டசபை தேர்தலில் அதிக தொகுதிகளில் தவெக முன்னிலை
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
காலை 10 மணி நிலவரப்படி100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் த.வெ.க. முன்னிலை வகித்து வருகிறது. இதன்படி
த.வெ.க. – 102
அ.தி.மு.க. – 82
தி.மு.க. – 50
நா.த.க. – 0








