மாநில ஜூனியர் ஆக்கி: தூத்துக்குடி மாவட்ட அணி `சாம்பியன்’
Oplus_16908288
கோயம்புத்தூரில் நடைபெற்ற மாவட்டங்களுக்கு இடையிலான மாநில ஜூனியர் ஆண்கள் ஆக்கி சாம்பியன் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட ஜூனியர் ஆண்கள் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
ஏ பிரிவில் இடம் பெற்ற தூத்துக்குடி மாவட்ட அணி முதல் போட்டியில் ஈரோடு மாவட்ட அணியை 11-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

இரண்டாவது லீக் போட்டியில் திருச்சி மாவட்ட அணியை 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
மூன்றாவது போட்டியில் திண்டுக்கல் மாவட்ட அணியை 8-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.
நான்காவது கடைசி லீக் போட்டியில் தென்காசி மாவட்ட அணியை 3- 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு தூத்துக்குடி மாவட்ட அணி தகுதி பெற்றது.
கால் இறுதி சுற்று போட்டியில் சென்னை மாவட்ட அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தூத்துக்குடி மாவட்ட அணி வெற்றி பெற்றது .
அரையிறுதி போட்டியில் கோயமுத்தூர் மாவட்ட அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இறுதி போட்டி ராமநாதபுரம் மாவட்ட அணியும் தூத்துக்குடி மாவட்ட அணியும் பலப்பரிட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் ராமநாதபுரம் மாவட்ட அணியை வீழ்த்தி தூத்துக்குடி மாவட்ட அணி வெற்றி பெற்று முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டது. இதன்மூலம் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் ஜூனியர் சாம்பியன் பட்டம் பெற்ற தூத்துக்குடி மாவட்ட அணி சிறப்பு பெற்றது.

தூத்துக்குடி மாவட்ட அணியின் தலைவர் அருண் சிறந்த முன்கள வீரருக்கான விருதை பெற்றார் போட்டியின் சிறந்த வீரராக அழகு மோகனப்ரியன் பெற்றார் அணியின் பயிற்சியாளர் முத்துக்குமார், துணை பயிற்சியாளர் மாயாண்டி, அணி மேலாளர் காளிமுத்து பாண்டியராஜா தூத்துக்குடி மாவட்ட செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி உள்ளிட்டோர் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு வீரர்களுடன் கோப்பையை பெற்றனர்.







