இந்திய அரசியலமைப்பு சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்

கோவில்பட்டி எஸ். எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் செல்வராஜ், வணிகவியல் துறை தலைவர் விஜய கோபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

நிகழ்ச்சியில் வணிக நிர்வாகவியல் துறை பேராசிரியர் ரித்திகா பாரதி வரவேற்று பேசினார்.
கல்லூரியின் முன்னாள் மாணவர் கோவில்பட்டி கம்பன் கழக செயலாளர் சரவணச்செல்வன், வழக்கறிஞர் ஜெய் ஸ்ரீ கிறிஸ்டோபர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் இராமலிங்கம் கலந்துகொண்டு அடிப்படை சட்டங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் சட்டத்தின் தீர்ப்புகள் எவ்வாறு மக்களுக்கு உதவுகிறது என்பதையும் எடுத்துரைத்தார். மேலும் சட்டத்தின் அமைப்பையும் நீதிமன்றத்தின் 4 அடிப்படை அமைப்புகளையும் அவை எவ்வாறு செயல்படும் என்பதையும் மாணவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பற்றிய சந்தேகங்கள் மாணவ மாணவியர் உயர் நீதிமன்ற வழக்கறிஞரிடம் வினாக்கள் கேட்டு தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டனர்
இந்நிகழ்ச்சியில் வணிகவியல் துறை மற்றும் வணிக நிர்வாகவியல் துறை மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் நிறைவாக வணிக நிர்வாகவியல் துறை பேராசிரியர் சுருதி நன்றி கூறினார்.
இந்திய சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர் வணிகவியல் துறை ராம ஜெயா, வெற்றிச்செல்வி, வணிக நிர்வாகவியல் துறை தலைவர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.







