கோவில்பட்டியில் த.வெ.க., வேட்பாளர் அறிமுக கூட்டம்
கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் பாலசுப்பிரமணியன் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் முனீஸ்வரன் தலைமை தாங்கி , வேட்பாளரை அறிமுகப்படுத்தி வைத்தார். கோவில்பட்டி நகர (கிழக்கு) நிர்வாகி செந்தில்குமார் வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் கட்சி நிர்வாகி வீரபாண்டிய மகேஷ் வாழ்த்துரை வழங்கினார்.மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் சம்பத்குமார் சிறப்புரையாற்றினார்
வேட்பாளர் பாலசுப்பிரமணியன் பேசுகையில், “தமிழக வெற்றிக் கழகம் கோவில்பட்டி தொகுதியில் வெற்றி பெற அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். த.வெ.க., தேர்தல் அறிக்கையை வீடு வீடாகச் சென்று மக்களிடையே எடுத்துக் கூறி ஓட்டு சேகரிக்க வேண்டும். கடந்த தி.மு.க, அ.தி.மு.க., ஆட்சியில் ஏற்பட்ட அவலங்களை எடுத்துக் கூறி , வரும் தேர்தலில் அமோக வெற்றி பெற அயராது உழைக்க வேண்டும் “என கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் சத்யா சுரேஷ் தொகுத்து வழங்கினார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் கூடலிங்கம் நன்றி கூறினார்.







