கோவில்பட்டி கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி
Oplus_16908288
கோவில்பட்டி கோ.வெ.நா கல்லூரி தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சிக்கு வணிகவியல் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி ஆசியாபார்ம்ஸ் நிறுவன உரிமையாளர் பாபு கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
நிகழ்வின் சிறப்பம்சமாக மஞ்சள் பைக்கு திரும்புவோம் என அனைவரும் உறுதி ஏற்றனர். இதனை தொடர்ந்து இளம் தொழில் முனைவோர் ஆர்த்தி, கேக் தயாரிப்பாளர் குளோரி, அழகுக்கலை நிபுணர். வித்யா குமார், மருதாணி கலைஞர் தாரணி, ஆராய்ச்சி மாணவர் தீபா மற்றும் தையல் கலைஞர் வீரலட்சுமி ஆகியோர் பயிற்சி வழங்கினர்.

ஏறத்தாழ 150 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். விழா ஏற்பாடுகளை, கல்லூரி செயலர் முனைவர்.ப.மகேந்திரன் மற்றும் முதல்வர் முனைவர்.மூ.சுப்புலட்சுமி ஆகியோரின் அறிவுறுத்தலின்படி வணிகவியல் துறைத்தலைவர் முனைவர்.ரேவதி , ஒருங்கிணைப்பாளர் முனைவர் வினாயஸ்ரீ, இதர உறுப்பினர்களான செல்வநந்தினி மற்றும் தர்ஷினிலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.
விழிப்புணர்வு கருத்தரங்கு

கோ.வெ.நா.கல்லூரி (தன்னாட்சி), ஆங்கிலத்துறை, லிங்குவாகாலிக் மொழி மேம்பாட்டு அமைப்பு மற்றும் மாணவர்கள் குறை தீர்க்கும் குழு இணைந்து “கல்வி மற்றும் தனிநபர் முன்னேற்ற வெற்றிக்கான இளம் மனங்களின் திறன் வலுப்படுத்துதல்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தின.
கல்லூரிச் செயலர் ப.மகேந்திரன், முதல்வர் மூ.சுப்புலெட்சுமி ஆகியோர் வழிகாட்டுதலின்படி 26.02.2026 அன்று நடைபெற்றது. கணிதவியல் துறை இணைப்பேராசிரியர் ரா.கிருஷ்ணவேணி வரவேற்புரையாற்றினார். வேதியியல் துறை இணைப்பேராசிரியர் வெ.கோமதி சங்கரேஸ்வரி ஆகியோர், ” இளைஞர்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்திக்கொண்டு இலக்கை நோக்கி முன்னேற வேண்டும்” என வலியுறுத்தினார்.
கணிதவியல் துறை இணைப்பேராசிரியர் எ. சுசிலா சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் செல்வி பி.வித்யலட்சுமி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.
ஆலங்குளம், ஆலடி அருணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி உளவியல் துறைத் தலைவர் ஜோன் திர்சா செல்வராஜ் மாணவர்களுக்கு கல்வி முன்னேற்றம், மனவள மேம்பாடு மற்றும் தனிநபர் வளர்ச்சி குறித்து பயனுள்ள கருத்துக்களை எடுத்துரைத்தார். நிறைவாக ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் அ.காயத்ரி நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆங்கிலத் துறைத்தலைவர் ரா.சரவண செல்வகுமார் மற்றும் உதவிப்பேராசிரியர்கள் செய்திருந்தனர்.







