நல்லகண்ணு உடல் ஆய்வுக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு வழங்கப்படுகிறது
வயது மூப்பு மற்றும் உடலில் குறைவால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்ல கண்ணு இன்று ( பிப்ரவரி 25) பிற்பகல் மரணம் அடைந்தார்
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து
நல்லகண்ணுவின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் தி நகர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மாலை 5 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் முக்கிய தலைவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நிர்வாகிகள் நல்ல கண்ணு உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று நல்லகண்ணு உடலுக்கு மரியாதை செய்தனர்.
நல்லக்கண்ணுவின் உடல் நாளை ( பிப்ரவரி 26) மாலை 3 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
அதன்பின் கட்சித் தோழர்களின் அணிவகுப்புடன் மாலை 5 மணிக்குள் சென்னை மருத்துவக் கல்லூரியிடம் நல்லக்கண்ணு எழுதிவைத்தபடி ஆய்வுக்காக வழங்கப்படும். என்று இந்திய கம்யூனிஸ்டு தெரிவித்துள்ளது.







