ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் 53வது மாத அன்னதானம்


தைப்பூசத்தை முன்னிட்டு கோவில்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் 53வது மாத அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு. தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஜீவானந்தம் ,ஜீவ அனுக்கிரக அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன், பசுமை இயக்கம் செந்தில், செல்வ விநாயகா ஸ்டோர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக கோவில்பட்டி கடலை மிட்டாய் வியாபாரிகள் சங்கத் தலைவர் கார்த்தீஸ்வரன் ,செந்தில் ஜூவல்லர்ஸ் சரவணன் ,தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில துணைப் பொதுச் செயலாளர் கயத்தாறு கணேசன், வந்தனா ஆயில் ஸ்டோர் சங்கரநாராயணன், கயல் மெட்டல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி வணிக வைசிய சங்கத் தலைவர் வெங்கடேஷ் பொங்கல் பிரசாதம் வழங்கினார். காவல்துறை கண்காணிப்பாளர் ஜெகநாதன் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன், ராகவேந்திரா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன் ,தலைவர் ஜெயக்கொடி ,பொருளாளர் கார்த்திகேயன். மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அருண் பேக்கரி மாடசாமி,கமலேஷ் மேட்ச் ஒர்க்ஸ் நடராஜன், பாலமுருகன் ஸ்டோர் பாலமுருகன் ,தேவி பிரேம் ஒர்க்ஸ் சண்முகசுந்தரம், நகர்மன்ற உறுப்பினர்கள் லவ ராஜா, சண்முகவேல், கணபதி ஜுவல்லர்ஸ் கதிரேசன், கொல்லம் சேகர் , முன்னாள் நகர மன்ற உறுப்பினர் மாரிமுத்து, ஆசிரியர்கள் அன்பழகன், ஆனந்த செல்வன் மற்றும் ஏழாயிரம் பண்ணை பாண்டி, நாகஜோதி மேட்ச் மேனேஜர் பாலமுருகன், வரதராஜன் ,அக்ரி கேசவன் மற்றும் பறக்கும் படை சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் தலைவர் மாடசாமி செயலாளர் மணிகண்டன் பொருளாளர் காளிராஜன் உள்பட கலந்து கொண்டனர்.
தொடக்கத்தில் மாலைமலர் நிருபர் தங்கராஜ் வரவேற்றார் முடிவில் மக்கள் தொலைக்காட்சி நிருபர் எஸ் பி பாண்டியன் நன்றி கூறினார்







