கழுகுமலை தேரோட்டத்தில் விபரீதம்: சக்கரத்தில் சிக்கி முதியவர் பலி
கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கழுகாசல மூர்த்தி கோவில் தைப் -பூசத் திருவிழா ஜனவரி 23ம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்தனர்.
இன்று 10ம் நாள் தைப்பூசத்தை யொட்டி தேரோட்டம் நடந்தது. காலை 7 மணிக்கு உற்சவர் கழுகாசலமூர்த்தி , வள்ளி, தெய்வானை தேரில் எழுந்தருளி னர். காலை 9.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கி யது.

நிலையிலிருந்து புறப் பட்ட தேர், தெற்குரதவீதி, கீழ ரதவீதி வழியாக மீண்டும் நிலையை வந்தடைய வேண்டும். தேரோட்டத்தின் போது தேரை திருப் புவதற்கு பாரம்பரியமாக கழுகுமலை, சிஆர் காலனியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் செக்யூரிட் டியாக வேலை பார்த்த சப்பாணிமுத்து (வயது 70) என்பவர் ‘கட்டை’ போடும் பணியை செய்து வந்தார்.
ஏராளமான பக்தர்கள் புடைசூழ தெற்கு ரதவீதியிலிருந்து கிழக்கு ரதவீதிக்கு தேர் திரும்பிய போது சப்பாணிமுத்து சக்கரத்தின் இடையே கட்டையை சொருகினார்.அப்போது திடீரென்று நிலை தடுமாறி கீழே விழுந்து தேர் சக்கரத்தில் சிக்கினார்.

தேர் அவரது தலையில் ஏறி இறங்கியது. இதில் அவர் தலை நசுங்கி படுகாயம் அடைந்தார்.உடனே தேரை இழுத்தவர் கள் தேரை நிறுத்தி விட்டு அவரை மீட்டு கோவில் பட்டி அரசு மருத்துவம னைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ‘ அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர்.
இதற்கிடையே தேர் கீழ ரதவீதியில் நிறுத்தப் பட்டது.பின்னர் தேர் நிலையை அடைந்தது.சம்பவம் குறித்து கழுகுமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







